herzindagi
maxresdefault () ()

Wheat Rava Halwa: சுவையான கோதுமை ரவை அல்வா செய்வது எப்படி?

சுவையான கோதுமை ரவை அல்வா செய்வது எப்படி என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
Editorial
Updated:- 2024-06-05, 17:05 IST

பண்டிகை காலத்தில் நம் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு ஏதேனும் இனிப்பு வகை செய்து கொடுக்கலாம். அந்த வரிசையில் நாம் வீட்டில் சமைக்கும் இனிப்பு வகைகள் ஆரோக்கியமானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அந்த வரிசையில் வீட்டில் இருந்தபடி சுவையான கோதுமை ரவை அல்வா செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

கோதுமை ரவை அல்வா செய்ய தேவையான பொருட்கள்:

  • ஒரு கப் கோதுமை ரவை 
  • ரெண்டு கப் சர்க்கரை 
  • ஒரு கப் கோவா (சர்க்கரை சேர்க்காதது)
  • அரை கப் நெய் 
  • தேவையான அளவு ஏலக்காய் பொடி 
  • சிறிதளவு முந்திரி பருப்பு 
  • சிறிதளவு பாதாம் பருப்பு 
  • சிறிதளவு கருப்பு திராட்சை 

சுவையான கோதுமை ரவை அல்வா செய்முறை: 

முதலில் ஒரு குக்கரில் தேவையான அளவு நெய்யை ஊற்றி அதில் கோதுமை ரவையை போட்டு குறைந்த தீயில் வைத்து நன்று வறுத்து எடுக்க வேண்டும். பிறகு ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பிறகு நெய்யில் வறுத்த கோதுமை ரவை வாசனை வர ஆரம்பித்ததும் அடுப்பு தீயை குறைத்து விட்டு சூடான தண்ணீரை எடுத்து இதில் ஊற்றி கிளற வேண்டும். தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி கிளற வேண்டும். வேகமாக தண்ணீர் ஊற்றினால் அது வெளியில் தெறிக்கும். இப்போது இந்த பாத்திரத்தை மூடி வைத்து தீயின் அளவை குறைத்து சுமார் பத்து நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும்.

Halwa  ()

இதற்குப் பிறகு சிறிதளவு தண்ணீரை ஒரு சிறிய கடாயில் ஊற்றி சூடாக்கி அதில் சர்க்கரை மற்றும் துருவிய கோவா சேர்த்து கிளறவும். இந்த சர்க்கரை பாகு பதத்தில் மாறி வரும் வரை நன்கு கலக்க வேண்டும். இப்போது இந்த கலவையை குறைந்த அளவு வெப்பத்தில் சிறு சிறிதாக நெய் விட்டு கிளறவும் இதனை கோதுமை ரவையுடன் சேர்த்து கிளற வேண்டும். பிறகு எல்லாம் ஒன்று சேர்ந்து கெட்டி ஆகி திரண்டு வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். இதனை அடுத்து தேவையான அளவு ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி விடவும். சுமார் 2 நிமிடங்கள் வரை நன்கு கலந்துவிட்ட பிறகு அடுப்பில் இருந்து இறக்கி நாம் நெய்யில் வறுத்து எடுத்த முந்திரி பருப்பு பாதாம் பருப்பு மற்றும் திராட்சை சேர்த்து பரிமாறினால் சுவையான கோதுமை ரவை அல்வா தயார். நம் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த கோதுமை ரவை அல்வாவே விரும்பி சாப்பிடுவார்கள்.

Image source: google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com