Carrot sago kheer: சுவையான கேரட் ஜவ்வரிசி பாயாசம் செய்வது எப்படி?

வீட்டிலேயே எளிய முறையில் சுவையான கேரட் ஜவ்வரிசி பாயாசம் செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

DSC   ()

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பிரபலமான ஒரு இனிப்பு வகை பாயாசம். நம் தென்னிந்தியாவில் இதை பாயாசம் என்றும் வட இந்தியாவில் கீர் என்றும் கூறப்படுகிறது. இந்த பாயாசம் 2000 வருடங்களுக்கு முன்பு ஒடிசா மாநிலத்தில் உருவான ஒரு இணைப்பு வகை ஆகும். பண்டைய காலத்தில் கடவுள்களுக்கு கோவிலில் வழங்கப்படும் உணவுகளில் பால் பாயாசம் தான் பிரபலம். இந்த வரிசையில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கேரட் ஜவ்வரிசி பாயாசம் செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

கேரட் ஜவ்வரிசி பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்:

  • ஒரு கப் ஜவ்வரிசி
  • ஒரு கப் துருவிய கேரட்
  • ஒரு கப் வெல்லம்
  • ரெண்டு டேபிள் ஸ்பூன் முந்திரி
  • ரெண்டு டேபிள் ஸ்பூன் பிஸ்தா
  • 2 டேபிள் ஸ்பூன் உலர்ந்த திராட்சை
  • ரெண்டு டேபிள் ஸ்பூன் பாதாம்
  • தேவையான அளவு நெய்
  • இரண்டு கப் பால்
  • அரை டேபிள் ஸ்பூன் ஏலக்காய் தூள்

மேலும் படிக்க: சுவையான வேர்க்கடலை லட்டு செய்வது எப்படி?

சுவையான கேரட் ஜவ்வரிசி பாயாசம் செய்வது எப்படி?

HFqJvqRjVecsxkhdEvhidWEEBnn

முதலில் ஒரு கப் ஜவ்வரிசியை தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இப்போது ஒரு சிறிய கடாயில் நெய் சேர்த்து முந்திரி பாதாம் உலர்ந்த திராட்சை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதே கடாயில் தேவையான அளவு நெய் ஊற்றி நன்றாக துருவிய கேரட்டை சேர்த்து வதக்க வேண்டும். கேரட் வெந்து கொண்டிருக்கும் போதே ஒரு கப் பாலை ஊற்றி நன்கு கிளற வேண்டும். இப்போது நாம் ஊற வைத்திருந்த ஜவ்வரிசியையும் சேர்த்து கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். இதற்கு பிறகு இதில் ஒரு கப் வெல்லம் சேர்த்து கலக்க வேண்டும். வெல்லமும் நன்றாக கரைந்து வந்ததும் மீதி உள்ள ஒரு கப் பாலை சேர்த்து கொதிக்க விடுங்கள். சிறிது நேரம் கழித்து கேரட் வெந்த பிறகு நாம் நெய்யில் வறுத்து எடுத்த முந்திரி உலர் திராட்சை பாதாம் பருப்பை சேர்த்து கிளறவும். பிறகு அரை டேபிள்ஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிண்டி விட்டு அடுப்பை அணைத்து இறக்கி விடுங்கள். அவ்வளவு தான் சுவையான கேரட் ஜவ்வரிசி பாயாசம் தயார். இதை சூடு ஆறிய பிறகு ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லாக பரிமாறலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த கேரட் ஜவ்வரிசி பாயாசத்தை விரும்பி சாப்பிடுவார்கள்.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP