குளிர்காலத்தில் பச்சை காய்கறிகளின் வரவு அதிகமாக இருக்கும். அதே போல் இந்த சீசனில் இலையுடன் கூடிய காய்கறிகளும் அதிகம் கிடைக்கும். இதனால் நம்மில் பலரும் குளிர்காலத்தில் மட்டுமே கிடைக்கும் இதுப்போன்ற காய்கறிகளை அதிகம் வாங்கி விதவிதமாக சமைக்க முயற்சி செய்வோம். இந்த பட்டியலில் பாலக் கீரையும் ஒன்று. குளிர்காலத்தில் பயங்கர ஃபிரஷாக கடைகளில் பாலக் கீரை விற்கப்படும். நம்மில் பலரும் பாலக் கீரையை பன்னீரில் சேர்த்து சமைக்க அதிக விரும்புவோம்.
இது சப்பாத்தி, பூரி, போன்ற உணவுகளுக்கு சிறந்த சைடிஷ். டேஸ்டும் அருமையாக இருக்கும். ஆனால் குளிர்காலத்தில் பாலக் பன்னீர் சாப்பிடுவது உடலுக்கு நல்லது இல்லை என்ற அதிர்ச்சி கலந்த உண்மையை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் ESIC மருத்துவமனையின் உணவியல் நிபுணர் ரிது பூரி. அவர் கூறும் காரணங்களை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம் வாருங்கள்.
காய்கறிகளைப் பொறுத்தவரை கீரை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. பாலக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் இது ரத்த சோகையை நீக்க உதவுகிறது. இது தவிர, தாமிரம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற தாதுக்களுடன், வைட்டமின் B காம்ப்ளக்ஸ், அஸ்கார்பிக் அமிலம், ஒமேகா-3-கொழுப்பு அமிலங்களும் இதில் காணப்படுகின்றன.
பன்னீரை எடுத்து கொண்டால் அது ஒரு பால் தயாரிப்பு ஆகும். கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துகள் இதில் நிறைந்திருக்கிறது. இதன் காரணமாக எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு பன்னீர் மிகவும் நல்லது. இது மட்டுமின்றி, எலும்பு முறிவு அல்லது ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் பன்னீர் குறைக்கிறது. மேலும் இதில் குறைந்தளவு கலோரி இருப்பதால் பன்னீர் சாப்பிடுவது எந்தவித பிரச்சனையும் ஏற்படுத்தாது.
இந்த பதிவும் உதவலாம்: ஹோட்டல் ஸ்டைலில் சுவையான, ஊட்டச்சத்துமிக்க காளான் பூண்டு கறி செய்வது எப்படி?
கீரையும் பன்னீரும் தனித்தனியே உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் உணவு பொருளாக பார்க்கப்படுகின்றன. ஆனால் கீரை மற்றும் பன்னீர் இரண்டையும் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல. இரும்பு மற்றும் கால்சியத்தை எப்போதும் ஒன்றாக சேர்த்து சாப்பிடக்கூடாது, ஏனெனில் உங்கள் உடலால் இரும்பு மற்றும் கால்சியம் இரண்டையும் ஒரே நேரத்தில் உறிஞ்ச முடியாது.
பாலக் பன்னீர் விஷயத்திலும் இதுதான் நிகழ்கிறது. பாலக் பன்னீரில் இரும்புச் சத்தும், கால்சியம் சத்தும் அதிகமாக இருப்பதால் இதை சேர்த்து சாப்பிடுவது எந்த பலனையும் தராது.
பாலக் பன்னீரை உட்கொள்வதால் உங்கள் உடலில் உள்ள சத்துக்களை இழப்பது மட்டுமல்லாமல், உடலில் நச்சுத்தன்மையும் அதிகரிக்கிறது. பாலக் பன்னீரில் இருந்து கிடைக்கும் சத்துக்களை உங்கள் உடலால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போகும் போது இது நிகழ்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: சுத்தமான வெல்லத்தை கண்டறிய உதவும் குறிப்புகள்
கீரை மற்றும் பன்னீர் இரண்டிலிருந்தும் கிடைக்கும் சத்துக்கள் உடலுக்கு வேண்டும் என நினைத்தால் நீங்கள் இரண்டையும் தனித்தனியாக உட்கொள்ளவும். கீரையில் இரும்புச் சத்து இருப்பதால் அதை உடல் உறிஞ்ச வைட்டமின் C நிறைந்த உணவை கீரையுடன் சேர்த்து கொள்ளவும்.
பன்னீர் கால்சியம் நிறைந்தது, எனவே வைட்டமின் D நிறைந்த உணவுகளை பன்னீருடன் சேர்த்து சாப்பிடவும். இப்படி தனித்தனியாகப் பிரித்து சாப்பிடும் போது உடலுக்கு அதிகபட்ச நன்மைகள் கிடைக்கும்.
எனவே இனிமேல் பாலக் கீரை மற்றும் பன்னீர் இரண்டையும் சரியான முறையில் உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளுங்கள்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com