சென்னை என்றதும் பலருக்கும் பல விஷயங்கள் நினைவுக்கு வரும். சென்னை மெரினா தொடங்கி மகாபலிபுரம், பெசன்ட் நகர், காந்தி மண்டபம், தலைவர்களின் சமாதி, விதவிதமான சாப்பாடு என பல விஷயங்கள் நினைவுக்கு வரும்.
அந்த வகையில் சென்னையில் மிகவும் முக்கியமான இடங்களில் தியாகராய நகர் என சொல்லப்பரும் தி நகர் மிகவும் பிரபலமானது. தி நகரில் கிடைக்காத விஷயங்களே இல்லை எனலாம். வீட்டுக்கு தேவையான பொருட்கள் தொடங்கி, ஷாப்பிங், நகைகள் என ஒரு கல்யாணம் செய்ய தேவையான அனைத்தும் இங்கு கிடைக்கும்.
இந்த பதிவும் உதவலாம்:படையெடுக்கும் மக்கள் காமாக்கியா கோயிலில் அப்படியென்ன ஸ்பெஷல்?
சென்னையில் இருப்பவர்கள் பண்டிகை நாட்களுக்கு ஷாப்பிங் செய்ய குடும்பத்துடன் செல்வது இங்கு தான். மொத்த குடும்பத்திற்கு தேவையான அனைத்தையும் ஒரே இடட்ர்ஹ்தில் வாங்கி விடலாம். அதே போல் வரிசைக்கட்டி நிற்கும் ஹோட்டல்களில் பலவகையான உணவுகளையும் ஒரு கை பார்க்கலாம். அந்த வகையில் இந்த பதிவில் தி நகரில் கிடைக்கும் ஃபேமஸான விஷயங்களை பற்றி பார்ப்போம்.
கல்யாண புடவை
பெண்களுக்கு கல்யாண புடவை எடுப்பதில் காஞ்சிபுரத்திற்கு அடுத்து தி நகர் தான் மிகவும் பிரபலம். அனைத்து விதமான பட்டுக்களும் இங்கு கிடைக்கும். ஆர்டர் செய்தும் புடவைகளை விருப்பதிற்கு ஏற்ப டிசைன் செய்து வாங்கலாம். வெளியூர்களில் இருந்தும் இங்கு புடவை வாங்க பொதுமக்கள் வருவதை பார்க்க முடியும்.
பெண்கள் ஸ்பெஷல்
சென்னை பெண்களுக்கு மிகவும் பிடித்தமான இடங்களில் தி நகரும் ஒன்றும். சுடிதார், கம்மல், ஜிம்மி, செருப்பு, வளையல் என வித விதமாக ஷாப்பிங் செய்யலாம். குறிப்பாக கல்லூரி பெண்கள் விடுமுறை நாட்களில் அதிகம் செல்லும் இடமாகவும் இது உள்ளது.
உணவுகள்
தி நகர் பக்கம் சென்றால் அதிகப்படியான மக்கள் தெருவோர உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுவதை பார்க்கலாம். சுண்டல், மாங்காய், பால் கடாம்பா, தேங்காய் பூ, பேரிக்கா, புளியங்காய் என 90ஸ் கிட்ஸ்களின் அனைத்து விதமான ஃபேவரெட் திண்பண்டங்களும் இங்கு கிடைக்கும்.
இந்த பதிவும் உதவலாம்:தமிழ்நாட்டில் இருக்கும் மர்மமான இடங்கள்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation