அனைத்தும் பிரச்சனைகளையும் தீர்த்து சக்தி தரும் ஆலயமாக திகழ்கிறது அஸ்ஸாமில் இருக்கும் காமாக்கியா கோயில். பிரம்மபுத்திரா நதிக்கரையின் அருகே அமைந்துள்ள இந்த ஆலயம் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். இந்த கோயிலில் பெண் உறுப்பை கடவுளாக கும்பிடப்படும் அதிசயிக்கத்தக்க நிகழ்வு காலகாலமாக பின்பற்றப்படுகிறது.
சிலை இருக்கும் கர்ப்பகிரகத்தில் தானாகவே நீர் ஊற்று நிரம்பி வழிகிறது. அதை எடுத்து தலையில் தடவி பக்தர்கள் வேண்டி கொள்கின்றனர். 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படும் இந்த கோயிலில் வழிப்பட உலகம் முழுவதிலிருந்தும் மக்கள் படையெடுத்து வருகின்றனர்.
இந்த பதிவும் உதவலாம்:தஞ்சாவூர் பெரிய கோயில் பிரகதீஸ்வரர் ஆலயத்தின் சிறப்புகள்
காம்மாக்கியா என்றால் பிரபஞ்சத்தின் தாய் என அர்த்தம். இந்த கோயிலில் தினமும் பலி கொடுப்பது வழக்கமாக உள்ளது. வருடத்தில் 3 நாட்கள் இந்த கோயில் முழுமையாக மூடப்படுகிறது. அதற்கு காரணம், அந்த 3 நாட்களுக்கு அம்மனுக்கு மாதவிடாய் நாட்கள் என நம்பப்படுகிறது. அந்த நேரத்தில் கோயிலுக்குள் செல்ல அனைவருக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது.
4ஆம் நாள் மீண்டும் பூஜை தொடங்கிய பின்பே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கபப்படுகின்றனர். அதே நேர, அம்மனுக்கு மாதவிடாய் நாட்களில் சிவப்பு துணியை கொண்டு மூடுவதாகவும் சொல்லப்படுகிறது. குழந்தை பாக்கியம், திருமண தடை, வயதுக்கு வருவதல் போன்ற பல தேவைகளுக்காக மனதார வேண்டி கொண்டு பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர்.
சமீபத்தில் பிரபல சின்னத்திரை நீலிமா ராணி தனது குடும்பத்துடன் காமாக்கிய கோயிலுக்கு சென்று வழிப்பட்டார். அந்த வீடியோவையும் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்:சென்னையில் திகில் அனுபவத்தை தரும் இந்த இடங்களை பற்றி தெரியுமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation