மர்மம், அமானுஷ்யம் நிறைந்த பல இடங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. கட்டுக்கதையா அல்லது உண்மை கதையா? என்பது இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை. ஆனால் இந்த இடங்களை பற்றி சொன்னாலே மக்கள் நஞ்சி நடுங்கும் அளவுக்கு இந்த இடங்களை பற்றிய பயம் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.
அந்த வகையில் இந்த பதிவில் தமிழ்நாட்டில் இருக்கும் மர்மம் மற்றும் அமானுஷ்யம் நிறைந்த சில முக்கியமான இடங்களை பற்றி பார்க்க போகிறோம். இதற்கு முன்பு இந்த இடங்களை பற்றி கேள்விப்படாதவர்கள் இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்:சென்னையில் திகில் அனுபவத்தை தரும் இந்த இடங்களை பற்றி தெரியுமா?
கரிக்காட்டு குப்பம்
முட்டுக்காடுக்கு அருகில் இருக்கும் கரிக்காட்டு குப்பம் மிகவும் திகிலான இடமாக பார்க்கப்படுகிறது. சுனாமியின் போது இங்கு வசித்த 4 பேர் உயிரிழந்தாக சொல்லப்படுகிறது. அதாவது வயதான முதியவர், இளம்பெண் மற்றும் 2 குழந்தைகள். இவர்களின் ஆவி இந்த பகுதியில் இரவு மற்றும் பகல் நேரத்தில் சுற்றி வருவதாக கூறப்படுகிறது. இங்கு இருக்கும் கோயில் மற்றும் பள்ளிக்கூட சுவர்களில் ரத்தக்கரைகள் படிவதாகவும் கதைகள் பரவின. இதனால் இங்கு வசித்த 300 குடும்பங்களும் அங்கிருந்து வெளியேறி விட்டனர். இப்போது மக்கள் வசிக்க முடியாத ஆள் நடமாட்டம் இல்லாத அமானுஷ்ய பகுதியாக கரிக்காட்டு குப்பம் மாறி விட்டது.
மதி கெட்டான் சோலை
கொடைக்கானலில் இருக்கும் இந்த மதி கெட்டான் சோலை பகுதி அமானுஷ்யம் நிறைந்தத பகுதியாக சொல்லப்படுகிறது. இங்கு மனிதர்கள் செல்ல அரசாங்கம் தடை செய்துள்ளது. அதையும் மீறி உள்ளே சென்றவர்கள் வீடு திரும்பவில்லை என்கின்றனர் உள்ளூர்வாசிகள். இந்த காட்டுக்குள் சூரிய ஒளிப்படாது எனவும் கூறப்படுகிறது.
தொப்பூர் கணவாய்
சேலத்தில் இருக்கும் தொப்பூர் கணவாய் சாலை அதிக உயிர்பலி வாங்கும் இடமாக உள்ளது. வாரத்திற்கு 3 முதல் 4 விபத்துக்கள் இங்கு நடப்பதாகவும் கூறப்படுகிறது. இங்கு இரவு நேரத்தில் ஆவி நடமாட்டம் இருப்பதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
மணியன் தீவு
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் மணியன் தீவு மர்மங்கள் நிறைந்த இடமாக பார்க்கப்படுகிறது. அதாவது அங்கு இருக்கும் ஆலமரம் ஒன்றை கண்டு மொத்த ஊர்மக்களும் அஞ்சி நடுங்குகின்றனர். இந்த ஆலமரத்தில் 20க்கும் மேற்பட்ட நபர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் மக்கள் இந்த இடத்திற்கு செல்வதை தவிர்க்கின்றனர்.
சூசைட் பாயிண்ட்
கொடைக்கானலில் இருக்கும் சூசைட் பாயிண் மிகப்பெரிய சுற்றுலா தலமாக உள்ளது. அதே நேரம் இந்த இடம் திகில் மற்றும் மர்மம் நிறைந்த இடமாகவும் பார்க்கப்படுகிறது. இங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டவர்கள் இதுவரை உயிர் பிழைத்ததாக சரித்திரமே இல்லை எனவும் கூறப்படுகிறது.
இதே போல் தமிழ்நாட்டில் இருக்கும் திகில் மற்றும் மர்மம் நிறைந்த இடங்களை பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்:படையெடுக்கும் மக்கள் காமாக்கியா கோயிலில் அப்படியென்ன ஸ்பெஷல்?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation