herzindagi
haunted places chennai

Haunted Place : சென்னையில் திகில் அனுபவத்தை தரும் இந்த இடங்களை பற்றி தெரியுமா?

சென்னையில் திகிலூட்டும் இடங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். இந்த இடங்களுக்கு இரவு நேரங்களில் தனியாக செல்ல பலரும் அச்சம் காட்ட காரணம் என்ன என்பதையும் இங்கு பார்க்கலாம். 
Editorial
Updated:- 2023-03-23, 11:33 IST

பேய், திகில், மர்மம் இவை எல்லாம் படத்தில் பார்த்து ரசித்தால் மட்டுமே நன்றாக இருக்கும். இதை நிஜ வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டும் என நினைப்பவர்கள் மிக மிக குறைவு. படத்தை பார்த்து வைப் ஆகி இதுப்போன்ற தேடலில் ஈடுப்பட்டவர்களின் முடிவு மிகவும் மோசமாக இருந்ததாக பல ஆராய்ச்சிகளின் மூலம் தெரிய வந்துள்ளது. பேய் என்பது உண்மையா? இல்லையா? என ஆராய்ச்சிக்குள் செல்வதற்கு முன்பே அவர்கள் ஒருவிதமான மன அழுத்தத்திற்கு ஆளாவதாக சொல்லப்படுகிறது.

அதனால் தான் திகிலான பேய் படங்களை பார்க்க குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதயம் பலவீனமானவர்கள், கர்ப்பிணிகள் பலரும் பேய் படங்கள் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என சொல்கின்றனர். சென்னையில் பேய் அச்சம் காட்டி, பல மர்ம கதைகளை சொல்லி சில இடங்கள் திகிலூட்டும் இடங்களாக அடையாளம் காட்டப்படுகின்றன. அது எந்தெந்த இடங்கள் என்பதை இப்போது பார்ப்போம்.

இந்த பதிவும் உதவலாம்:தெரிந்துகொள்வோம் வாருங்கள் தமிழ்நாட்டின் மிகச் சிறந்த இடங்கள் ஒரு பார்வை

டீமான்டி காலணி

சென்னைவாசிகள் பலருக்கு இந்த இடத்தை பற்றி நன்கு தெரியும். டீமான் டி காலணி என்ற பெயரில் வெளியான அருள் நிதியின் படத்தில் இந்த இடம் குறித்த சில தகவல்கள் சொல்லப்பட்டு இருக்கும். இங்கு குடும்பங்கள் வாழ்ந்தாலும் இரவு நேரங்களில் செல்ல பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர். இரவு நேரங்களில் இங்கு அமானுஷ்யமான சம்பவங்கள் நிகழ்வதாகவும் கூறப்படுகிறது. வளர்ப்பு பிராணிகள் இந்த தெருக்களில் செல்வதற்கு பயப்படுவதாகவும் பலரும் தெரிவித்துள்ளனர்.

chennai demandy colony

வால்மீகி நகர்

சென்னை அம்பேத்கர் சாலைக்கு அருகில் இருக்கும் வால்மீகி நகர் பற்றி கூகுளில் பல தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன. இங்கு இருக்கும் பழைய வீட்டில் பெண் ஒருவரின் அழு குரல் கேட்பதாக அங்கு இருப்பவர்கள் பலமுறை இதுக் குறித்து புகார் தெரிவித்துள்ளனர்.

சோழிங்கநல்லூர் ஐடி கம்பெனி

பிரபல ஐடி கம்பெனி ஒன்று கட்டப்பட்டிருக்கும் இடம் சில ஆண்டுகளுக்கு முன்பு சுடுகாடாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இரவு நேரங்களில் இங்கு திகிலூட்டும் பல சம்பவங்கள் அரங்கேறி இருப்பதாக கூறப்படுகிறது.

chennai horror places

ப்ளு கிராஸ் சாலை

சுற்றி மரங்கள், பெரிய ஆலமரம் ஆகியவை பகலில் நிழலை தந்தாலும் இரவு நேரங்களில் இந்த இடத்தை பார்க்க மிகவும் திகிலாக இருக்கும். பல சமயங்களில் இங்கு அதிகப்படியான விபத்துக்கள் நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.

விக்டோரியா ஹாஸ்டல் ரோடு

சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகில் இருக்கும் இந்த சாலை திகில் மற்றும் மர்மம் நிறைந்தவையாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இந்த சாலை வழியாக செல்ல பலரும் அச்சம் காட்டுவார்கள். இந்த பகுதி குறித்து சினிமாவிலும் சொல்லப்பட்டுள்ளது.

இந்த பதிவும் உதவலாம்:தமிழ்நாட்டில் இருக்கும் பிரபல உணவு தெருக்கள் பற்றிய சுவாரசிய தகவல்கள்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com