உணவு வாழ்வியலுடன் கலந்து விட்ட ஒன்று. முன்பு இல்லாத அளவுக்கு உணவுக்கு இன்றைய தலைமுறையினர் அதிக முக்கியத்துவம் கொடுப்பதை பார்க்க முடிகிறது. தேடி தேடி சென்று உணவுகலை ருசி பார்க்கின்றனர். ஊரு விட்டு ஊரு, நாடு விட்டு நாடு போய் இப்போது விட்டால் கண்டம் விட்டு கண்டம் கூட ஃபுட் ரிவியூ செய்வார்கள் போல. அந்த அளவு உணவுகள் குறித்த ரிவியூக்கள் அதிகரித்துள்ளன.
ஆரோக்கியம் குறித்து பார்க்கும் போது அதிகப்படியான ரோட்டுககடை உணவுகள் உடலுக்கு தீங்கு என்பதை தான் மருத்துவர்கள் பதிவு செய்கின்றனர். இருந்தாலும் ருசி யாரை விட்டது, வீடியோ பார்க்கும் போதே அதை சாப்பிட வேண்டும் என்ற ஆசை மூளைக்குள் சென்று விடுகிறது. மூளையும் அதை சரியாக செயல்படுத்தி விடுகிறது. மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியா உணவை கொண்டாடும் தேசமாக உள்ளது. அதிலும் குறிப்பாக தென்னிந்திய உணவுகளில் தமிழ்நாடு உணவுக்கு பெயர் போனது.
இந்த பதிவும் உதவலாம்:தஞ்சாவூர் பெரிய கோயில் பிரகதீஸ்வரர் ஆலயத்தின் சிறப்புகள்
ஃபுட் கோர்ட், ஃபுட் ஸ்டீர்ட், உணவு திருவிழா ஆகியவை இங்கு ரொம்ப ஃபேமஸ். அந்த வகையில் இந்த பதிவில் தமிழ்நாட்டில் இருக்கும் பிரபலமான உணவு தெருக்களை குறித்து பார்போம்.
மதுரையில் உணவுக்கு தனி திருவிழாவே நடக்கும். அந்த அளவுக்கு உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர் மதுரைவாசிகள். மதுரை பழைய பஸ் ஸ்டாப் தொடங்கி ஆவின் பால் பண்ணை வரை வரிசையாக ஹோட்டல்கள் இருக்கும். இங்கு பரோட்டா தொடங்கி பிரியாணி, குடல் கறி, மூளை வறுவல், மட்டன் சுக்கா, கொத்து பரோட்டா, பொரித்த பரோட்டா இப்படி மதுரை ஃபேமஸ் உணவுகளை ருசித்து கொண்டே பொழுதை கழிக்கலாம்.
குற்றாலம், தென்காசி சாலையோரத்தில் இருக்கும் உணவுக்கடைகள் மிகவும் பிரபலமானவை. பார்டர் பரோட்டா, பிச்சி போட்ட பரோட்டாம், சால்னா கறி ஆகியவை வயிறார ருசிக்கலாம். திருநெல்வேலி பக்கம் செல்பவர்கள் இந்த உணவுகளை ருசி பார்க்காமல் ஊர் திரும்புவது இல்லை.
சென்னை நகரில் கிடைக்காத உணவுகளே இல்லை எனலாம். பானிப்பூரிக்கு சவுகார்ப்பேட்டை, பிரியாணிக்கு திருவல்லிக்கேணி, அத்தோவுக்கு பிராட்வே, தோசைக்கு அண்ணாநகர், மீன் வறுவலுக்கு மெரினா என ஒவ்வொரு இடங்களும் இப்படி ஒவ்வொரு உணவுக்கு பெயர் போனவை. சென்னையில் நடு இரவில் இயங்கும் ஃபுட் கோர்டுகளும் ஏராளம்.
இந்த பதிவும் உதவலாம்:பாண்டிச்சேரி சுற்றுலா செல்ல பெஸ்ட் டைம் எது தெரியுமா?
நாகப்பட்டினம், வேளாங்கண்ணி செல்பவர்கள் புட்டு, வறுத்த மீன், கனவாய் வறுவல் ஆகியவற்றை ஒரு பிடி பிடிக்கலாம். அந்த மார்க்கெட் சாலை முழுவதும் குட்டி குட்டி கடைகளிலும் கூட்டம் அலை மோதும். வாசனையே நம்மை சாப்பிட்ட இழுக்கும்.
இதுமட்டுமில்லை இதுபோல தமிழ்நாட்டில் பல உணவு தெருக்கள் உள்ளன. அவற்றை பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com