-1762280940188.webp)
நம்முடைய அம்மாக்கள் ஒவ்வொருவரும், நாங்கள் வளர்த்த மாதிரி நீங்க குழந்தையை வளர்க்கவில்லை, என்ற வார்த்தைகளை அடிக்கடி வீடுகளில் கூறுவதைக் கேட்டிருப்போம். ஆம் அக்காலத்து குழந்தைகளை விட இக்காலத்தில் உள்ள குழந்தைகளை வளர்ப்பது என்பது பெற்றோர்களுக்கு மட்டுமல்ல உடனிருக்கும் உறவினர்களுக்கும் பெரும் சவாலாக அமைகிறது. எப்படியோ பலவற்றைக் கடந்து குழந்தைகளை வளர்த்தாலும் பல நேரங்களில் பெற்றோர்களாலும் பல பாதிப்பகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக குழந்தைகள் முன்னதாக பெற்றோர்கள் ஏதோ ஒரு பிரச்சனை மற்றும் வேறு காரணத்திறாக அழும் போது மனரீதியாக பல்வேறு மாற்றங்களை சந்திக்க நேரிடுகிறது.
மேலும் படிக்க: குழந்தைகளிடையே அதிகரிக்கும் மன அழுத்தம்; பெற்றோர்கள் கட்டாயம் இதை மட்டும் செய்திடுங்க!
வாழ்க்கையில் ஏதோ ஒரு விஷயத்திற்காக அழுவோம் அல்லது பல நேரங்களில் அம்மாக்களின் அழுகைக்கு குழந்தைகள் முக்கிய காரணமாக அமைகிறார்கள். ஒருவேளை குழந்தைகளால் அழும் சூழல் ஏற்பட்டால் முதலில் அவர்கள் முன்னதாக அழாதீர்கள். ஒருவேளை நீங்கள் அதிகமாக அழும் போது ஏன் நம்முடைய அம்மாக்கள் இந்தளவிற்கு அழுகிறார்கள்? என்ற மனநிலையை ஏற்படுத்தும். மன அமைதியையும் சீர்குலைக்கும்.
மேலும் படிக்க: குழந்தை வளர்ப்பு: பெற்றோர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய குறிப்புகள்
நீங்கள் அழும் போது குழந்தைகளிடம் என்ன காரணம் என்று சொல்லுங்கள். இல்லையென்றால் உங்களுக்கு குழந்தைகளும் ஏதாவது ஒன்று தேவை என்றால் அழுது பெற்றுவிடலாம் என்ற மனநிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவார்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com