”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பது போல் அனைத்தும் நமது ஊரே, அனைத்து மக்களும் நம் மக்களே. தமிழுக்கு இருக்கும் சீரும் சிறப்பும், தொன்மையான வரலாறும், ஆயிரம் பெருமை சொல்லும் கட்டிக்கலையும் இன்றும் உலகம் முழுவதும் போற்றப்படுகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் பல இடங்கள் உலக மக்களால் வியந்து பார்க்கப்படுகிறது.
அதன் ஈர்ப்பால் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் தொடங்கி உள்ளூர் வாசிகளை வரை தமிழ்நாட்டில் இருக்கும் அழகான இடங்களை பார்க்க படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் இந்த பதிவில் தமிழ்நாட்டில் இருக்கும் மிகச் சிறந்த இடங்கள் பற்றி பார்போம்.
இந்த பதிவும் உதவலாம்:தஞ்சாவூர் பெரிய கோயில் பிரகதீஸ்வரர் ஆலயத்தின் சிறப்புகள்
தூங்கநகரமான மதுரை தமிழர்களின் பெருமைக்கு பெயர் போன இடமாக உள்ளது. இங்கு இருக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தொடங்கி, மதுரை நாயக்கர் மகால், சுருளி அருவி, கூடல் அழகர் கோயில், பத்து தூண்கள் என சுற்றி பார்க்க ஏகப்பட்ட இடங்கள் உள்ளன.
சோழர்களின் நகரமாக பார்க்கப்படும் தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாட்டின் மிகவும் முக்கியமான மாவட்டங்களில் ஒன்று. தஞ்சை பெரிய கோயில் தொடங்கி பெரிய கோட்டை, சரஸ்வதி மகால், தஞ்சாவூர் மாளிகை, பூண்டி மாதா ஆலயம் ஆகியவை மிகவும் முக்கியமான சுற்றுலாதலமாக உள்ளது.
தமிழ் நாட்டின் மிகப்பெரிய மாவட்டமான கோயம்புத்தூரில் சுற்றி பார்க்க ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன. மருதமலை கோயில் தொடங்கி, ஆழியார் அணை, ஆதியோகி சிவன் சிலை, முதுமலை , தாவரவியல் பூங்கா ஆகியவை கட்டாயம் செல்ல வேண்டிய சுற்றுலா தலமாக உள்ளது.
தமிழகத்தின் தலைநகரமான சென்னை மிகச் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. சென்னை மெரினா பீட்ச் தொடங்கி, மாமல்லபுரம், மயிலாப்பூர் கோயில், கிழக்கு கடற்கரை சாலை, பெசண்ட் நகர், வட சென்னை, சென்னை எஉம்பூர், கிண்டி பூங்கா என பெரிய லிஸ்டு உள்ளது.
மலைப்பிரதேசங்களை விரும்புவர்கள் ஊட்டி, கொடைக்கானல் பகுதியை அதிகம் விரும்புவார்கள். பனி மூட்டம், சுத்தமான காற்று, இயற்கை அழகு என தமிழகத்தின் காஷ்மீராக திகழ்கிறது ஊட்டி மற்றும் கொடைக்கானல்.
தென்கோடியில் அமைந்திருக்கும் கன்னியாகுமரியில் சுற்றி பார்க்க பல இடங்கள் உள்ளன. திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை, தியான பீடம் இப்படி தவிர்க்க முடியாத இடங்கள் பல உள்ளன.
கடைகோடியில் இருக்கும் ராமேஸ்வரம் புனித ஸ்தலமாகவும் பார்க்கப்படுகிறது. தனுஷ்கோடி பீட்ச் தொடங்கி பாம்பன் பாலம், புனித தீர்த்தம், கோயில் என மிஸ் செய்யக்கூடாத இடங்கள் பல உள்ளன.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com