தமிழ்நாட்டில் கோடை கோயில் தொடங்கி விட்டது. குழந்தைகளுக்கும் ஸ்கூல் லீவ் விட்டாச்சு சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற நகரங்களில் வெயில் மண்டையை பொளக்க தொடங்கி விடும். இந்த நேரத்தில் மிடில் கிளாஸ் குடும்பங்கள் தொடங்கி பிரபலங்கள் வரை அனைவரும் குடும்பத்துடன் பிளான் செய்யும் விஷயம் சம்மர் டூர்.
குறிப்பாக பிரபலங்கள் வெளிநாடுகளுக்கு செல்ல அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் பட்ஜெட் டூர் பிளான் செய்யவர்கள் கவலையே பட வேண்டாம். இந்தியாவிலே சுற்றி பார்க்க ஏகப்பட்ட இடங்கள் உள்ளன. கோடை வெயிலில் இருந்து தப்பிக்க 1 வாரத்திற்கு இந்தியாவில் இருக்கும் இந்த இடங்களுக்கு சென்று வாருங்கள்.
இந்த பதிவும் உதவலாம்:தமிழ்நாட்டில் இருக்கும் மர்மமான இடங்கள்
ஜில்லென்ற அனுபவம் கிடைக்கும். அந்த வகையில் இந்த பதிவில் சம்மர் சீசனில் இந்தியாவில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் குறித்து பார்ப்போம்.
குலு மணாலி
ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் அமைந்திருக்கு குலு மணாலி மிகச் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. பனி மூட்டம் பனி பொழிவு, பனி மழை என இந்த சம்மர் வெயிலில் இருந்து தப்பிக்க மிகச் சிறந்த இடம் குலு மணாலி. பட்ஜெட்டில் சென்று வரகூடிய சிம்பிள் டூர். குழந்தைகளும் என்ஜாய் செய்வார்கள்.
கூர்க்
கர்நாடக மாநிலத்தில் அமைந்திருக்கும் கூர்க் மிகச் சிறந்த சுற்றுலா தலமாகும். குட்டி காஷ்மீர் என சொல்லப்படுகிறது. ட்ரிங், யானைகள் முகாம், நீர்வீழ்ச்சி, என இங்கு சுற்றி பார்க்க பல இடங்கள் உள்ளன. இரவு நேரத்தில் இங்கு அதிகப்படியான குளிர் வீசும்.
சிம்ளா
ஹிமாச்சல பிரதேசத்தில் அமைந்திருக்கும் சிம்ளா அதிகப்படியான மக்கள் விரும்பும் சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் பனிப்பொழிவு காணப்படும். இந்த சம்மரில் இருந்து தப்பிக்க மிகச் சிறந்த வழி சிம்ளா செல்வது.
லடாக்
சமீபகாலமாக அதிகப்படியான மக்கள் விரும்பி செல்லும் இடமாக மாறி வருகிறது லடாக். குறிப்பாக இளைஞர்களை அதிகம் விரும்பி செல்கின்றனர். நண்பர்களுடன் சம்மர் ட்ரிப் பிளான் செய்பவர்கள் லடாக் சென்று வரலாம்.
சிரபுஞ்சி
மேகாலய மாநிலத்தில் அமைந்திருக்கும் சிரபுஞ்சி சம்மருக்கு ஏற்ற பிக்னிக் ஸ்பாட். குடும்பத்துடன் சென்று வரவும் மிகச் சிறந்த இடம். இயற்கை அழகை ரசித்தப்படியே, மலைகளுடன் பனி என சிரபுஞ்சி அழகை ரசிக்க இந்த சம்மருக்கு குடும்பத்துடன் சென்று வாருங்கள்.
இந்த பதிவும் உதவலாம்:சென்னை தியாகராய நகர் எதுக்கெல்லாம் ஃபேமஸ் தெரியுமா?
இதே போல் இந்தியாவில் கோடை காலத்தில் செல்ல வேண்டிய பல சுற்றுலா இடங்கள் உள்ளன. அதுக் குறித்து அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.
Images Credit: freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation