Kutralam Falls : குற்றாலத்தில் குளிக்க எத்தனை ஃபால்ஸ் இருக்கு தெரியுமா?

குற்றாலம் செல்பவர்கள் மொத்தம் எத்தனை ஃபால்ஸ்களில் குளிக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். அதே போல் குற்றாலத்தில் இருக்கும் மொத்த ஃபால்ஸ்களை பற்றியும் பார்ப்போம். கோடை காலத்தில் குற்றாலம் சுற்றுலா செல்பவர்களுக்கு இந்த பதிவு உதவும். 

kutralam falls list tamil

தென்காசி மாவட்டத்தில் இருக்கும் குற்றாலம் மிகப் பெரிய சுற்றுலாதலமாக உள்ளது.தென்னிந்தியாவின் ஸ்பா எனச் சொல்லப்படும் குற்றாலத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். சீசன் டைமில் அதிகப்படியான கூட்டம் இங்கு நிரம்புவதை பார்க்கலாம்.

மெயின் அருவி தொடங்கி குரங்கு அருவி, பழைய குற்றாலம் என குற்றாலத்தில் குளிக்க வேண்டிய அருவிகள் ஏகப்பட்டது உள்ளது. எனவே, இந்த பதிவில் குற்றாலத்தில் இருக்கும் மொத்த அருவிகள் குறித்து பார்க்கலாம் வாருங்கள்.

பழைய குற்றாலம்

இந்த அருவியின் சிறப்பு இது 2 பாறைகள் இடையே உள்ள பள்ளத்தாக்கில் இருந்து விழகிறது. குற்றாலம் செல்பவர்கள் பழைய குற்றாலத்தில் குளிக்காமல் ஊர் திரும்ப மாட்டார்கள்.

செண்பகதேவி அருவி

இந்த அருவியில் நீர்வீழ்ச்சியானது செண்பக மரங்கள் வழியாக பாய்கிறது. அருவிக்கு அருகில் செண்பகதேவி அம்மன் கோயிலும் உள்ளது.

புலி அருவி

சுற்றுலா பயணிகளுக்காக இந்த அருவி செயற்கையாக உருவாக்கப்பட்டது. குற்றாலம் செல்பவர்கள் கட்டாயம் புலி அருவியை கண்டு ரசிக்கலாம்.

falls tamilnadu

பேரருவி

குற்றாலத்தில் இது தான் மெயின் அருவி. சுமார் 60 மீட்டர் உயரத்தில் இருந்து நீர்வீழ்ச்சி கொட்டுகிறது. மிகவும் பாதுகாப்பான முறையில் சுற்றுலா பயணிகள் இங்கு குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

சிற்றருவி

குழந்தைகள் குளிக்க ஏற்றது. அதே போல் நீர் கொட்டும் அழுத்தமும் குறைவாக இருக்கும். பெண்களும் குளித்து மகிழலாம்

தேனருவி

இந்த அருவியின் சிறப்பு 2 பெரிய கற்கள் இடையே 40 மீட்டர் உயரத்தில் இருந்து நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது.

ஐந்தருவி

இங்கு மலைப்பாறைகளின் மீதிருந்து 5 பிரிவுகளாக தண்ணீர் ஆர்பார்த்தித்து கொட்டுகிறது. இந்த ஐந்தருவியின் 5 பிரிவுகளில் 2 பிரிவுகள் பெண்கள் குளிப்பதற்கும், 3 பிரிவுகள் ஆண்கள் குளிப்பதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவும் உதவலாம்:தென்னிந்தியாவில் இருக்கும் திகில் நிறைந்த இந்த 10 இடங்களை பற்றி தெரியுமா?

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP