மனிதர்களுக்கு எப்போதுமே திகில், மர்மம் குறித்து தெரிந்து கொள்வது, அதுப்பற்றி தேடி தேடி படிப்பதும் மிகவும் பிடிக்கும். அந்த வகையில் இந்த பதிவில் தென்னியந்தியாவில் இருக்கும் திகில் நிறைந்த இடங்களை பற்றி பார்க்க போகிறோம்.
எதோ ஒரு காரணத்தில் இந்த இடங்கள் மனிதர்களால் பயன்படுத்த முடியாத அமானுஷ்யம் நிறைந்த இடங்களாக மாறி போய்விட்டதாக கூறப்படுகிறது. அதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.
இந்த பதிவும் உதவலாம்:தெரிந்துகொள்வோம் வாருங்கள் தமிழ்நாட்டின் மிகச் சிறந்த இடங்கள் ஒரு பார்வை
திருவனந்தபுரத்தில் இருந்து 50 கிமீ தொலைவில் அகஸ்திய மலையின் அடிவாரத்தில் இந்த பங்களா அமைந்துள்ளது. இது கேரள மக்களால் பேய் வீடு எனவும் அழைக்கப்படுகிறது. இந்த வீட்டுக்கு அருகில் மர்மமான இளம் பெண் அடிக்கடி தென்படுவதாக நம்பப்படுகிறது. ஊர்மக்கள் இங்கு வருவதை முற்றிலும் தவிர்க்கின்றனர்.
சென்னை அம்பேத்கர் சாலைக்கு அருகில் இருக்கும் வால்மீகி நகர் பற்றி கூகுளில் பல தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன. இங்கு இருக்கும் பழைய வீட்டில் பெண் ஒருவரின் அழு குரல் கேட்பதாக அங்கு இருப்பவர்கள் பலமுறை இதுக் குறித்து புகார் தெரிவித்துள்ளனர்.
ஐதராபாத்தில் இருக்கும் இந்த பங்களா பேய்கள் நிறைந்த பங்களா எனவும் உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகிற்து. அதற்கு காரணம், குந்தன்பாக் வீட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் மற்றும் அவரது இரண்டு மகள்கள் வசித்து வந்ததாக நம்பப்படுகிறது. இவர்களது வீட்டை இரவில் கொள்ளையடிக்கச் சென்ற திருடன் ஒருவரால் மர்மமான முறையில் வீட்டில் அவர்களது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. பிரேத பரிசோதனையில் 3 பேரும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்தது தெரியவந்தது. இருப்பினும், அக்கம் பக்கத்தினர் அவர்களை முந்தைய நாள் கூட் நேரில் பார்த்ததாக கூறினர். அதன் பின்பு அந்த வீட்டு பேய் வீடாக அனைவராலும் பார்க்க்ப்படுகிறது.
பெங்களூரில் இருக்கும் இந்த மயானம் பேய்கள் நிறைந்த இடமாக கருதப்படுகிறது. இங்கு நடந்த பல விவரிக்கப்படாத அமானுஷ்ய நடவடிக்கைகளால் இந்த இடம் பேய்கள் நிறைந்த பகுதியாக பார்க்கப்படுகிறது.
ஆந்தியா சித்தூர் ரயில் நிலையட்ஜ்ஹ்தில் நிறைய பேய்கள் இரவு நேரத்தில் சுற்றி வருவதாக கூறப்படுகிறது. இங்கு விபத்தில் இறந்தவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள் மக்கள் கண்களுக்கு இரவு நேரத்தில் தெரிவதாக உள்ளூர் மக்கள் நம்புகின்றனர்.
சென்னையில் இருக்கும் டிமாண்டி காலணியில் குடும்பங்கள் வாழ்ந்தாலும் இரவு நேரங்களில் செல்ல பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர். இரவு நேரங்களில் இங்கு அமானுஷ்யமான சம்பவங்கள் நிகழ்வதாகவும் கூறப்படுகிறது. வளர்ப்பு பிராணிகள் இந்த தெருக்களில் செல்வதற்கு பயப்படுவதாகவும் பலரும் தெரிவித்துள்ளனர்.
‘சங்கிலி மரம்’ கேரளாவில் உள்ள வயநாட்டில் உள்ள லக்கிடி என்ற பகுதியில் உள்ளது. இது ஆவிகள் நிறைந்த மரமாகவும் பார்க்கப்படுகிறது. உள்ளூர்வாசிகள் இந்த இடத்தை கடக்க அச்சம் கொள்கின்றனர்.
1893 இல் கட்டப்பட்ட இந்த மருத்துவமனை பற்றி சில அமானுஷ்ய கதைகள் சொல்லப்படுகின்றன. இந்த மருத்துவமனையில் இருக்கும் மரத்தி கண்டு பலரும் அஞ்சுகின்றனர். அதே போல் இந்த மருத்துவமனையில் மர்மமான முரையில் உணவு பொட்டலங்கள் காணமால போவதாகவும் சொல்லப்படுகிறது.
முணுமுணுக்கு கோட்டை என சொல்லப்படும் இந்த கோல்கொண்டா கோட்டை ஐதராபாத்தில் உள்ளது. மாலை 6ம்ணிக்கு மேல் இங்கு திகிலான சம்பவங்கள் அரங்கேறுவதாக சொல்லப்படுகிறது.
அடையாறில் இருக்கும் தியோசாபிகல் சொசைட்டி மர்மம் நிறைந்த இடமாக சிலர் கருதுகின்றனர். இங்கு இருக்கும் ஆலமரத்தை சுற்றி பல கதைகள் சொல்லப்படுகின்றன. மக்கள் அந்த பகுதிக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவும் உதவலாம்:சம்மரில் இந்தியாவில் சுற்றி பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கு!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com