
கோடை காலம் நெருங்கி விட்டது. ஸ்கூல் பிள்ளைகளுக்கும் லீவ் விட்டாச்சு. இந்த கோடை விடுமுறையை கழிக்க சுற்றுலா செல்வது வழக்கமான ஒன்று. அதிலும் பட்ஜெய்யில் டூர் போக பிளான் செய்பவர்கள் கட்டாயம் நம்மூரில் இருக்கும் இடங்களுக்கு செல்லலாம் என நினைப்பார்கள்.
அந்த வகையில் இந்த சம்மருக்கு நம்மூரில் இருக்கும் குளுகுளு மலைப்பிரதேசங்கள் பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள்,. பின்பு உங்களுக்கு பிடித்தமான இடத்தை தேர்ந்தெடுத்து ஜாலியா சுற்றுலா சென்று வாருங்கள்.
இந்த பதிவும் உதவலாம்:சென்னைக்கு அருகில் இருக்கும் அட்டகாசமான ரிசார்டுகள்
தமிழ்நாட்டில் இருக்கும் மிக முக்கியமான மலைப்பிரதேசமாகும். இங்கு சுற்றி பார்க்க ஏகப்பட்ட இடங்கள் உள்ளன. தாவரவியல் பூங்காக்கள், ஏரிகள், பள்ளத்தாக்குகள் சுற்றுலா என 3 நாட்களுக்கு பிளான் செய்து குடும்பத்துடன் சுற்றுலா சென்று வாருங்கள்.
மலைகளின் அரசி நீலகிரி ஏழைகளின் ஊட்டி எனலாம். ஜீன் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இங்கு சீசன் அட்டகாசமாக இருக்கும். அதே போல் சுற்றி பார்க்க தொட்டபெட்டா. அவலாஞ்சி ஏரி, எமரால்டு ஏரி, கலஹட்டி நீர்வீழ்ச்சி என பல இடங்கள் உள்ளன.

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏற்காடு சம்மர் டூர் செல்ல சிறந்த இடமாக உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 5326 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மலைப்பிரதேசம் மிகவும் சூப்பரான சுற்றுலா தலமாகும். இங்கு செல்ல 20 கொண்டை ஊசி வளைவுகளை கடக்கும் அனுபவம் தி பெஸ்ட்.
அறிமுகமே தேவையில்லாத சுற்றுலா தலம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்ல விரும்பும் இடம் ஊட்டி. இங்கு கண்டு ரசிக்க ஏகப்பட்ட இடங்கள் உள்ளன. நீர்வீழ்ச்சி தொடங்கி தேயிலை தோட்டம், எஸ்டேட், சிகரங்கள் என ஊட்டில் சுற்றுலா பயணிகளின் ஆல் டைம் ஃபேவரெட் ஸ்பாட்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது சிறுமலை. மலைகளின் சின்ன இளவரசி என்று அழைக்கப்படும் இங்கே ட்ரக்கிங் தொடங்கி கேம் ஃபையர், ஃபால்ஸ் என ரசிக்க பல விஷயங்கள் உள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொல்லி மலை மிகச் சிறந்த சுற்றுலா தலம். மூலிகைகள் நிறைந்த இந்த மலையில் சுற்றி பார்க்க பல சிறப்பு இடங்கள் உள்ளன. அறப்பலீசுவரர் கோவில், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, படகு இல்லம் ஆகியவை பயங்கர ஃபேமஸ்.
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் மத்தியில் அமைந்துள்ளது வால்பாறை. இயற்கையின் அற்புத தேசம் என சொல்லப்படும் வால்பாறையில் பனி, மழை ஆகியவற்றை ஒரே நேரத்தில் பார்க்கலாம்.
தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள மேகமலை தமிழா - கேரள எல்லையாக இருக்கிறது. இங்கு மகாராஜா மெட்டு, மணலாறு உட்பட சுற்றி பார்க்க பல இடங்கள் உள்ளன.. நிச்சயம் மிஸ் செய்து விடாதீர்கள்.
இந்த பதிவும் உதவலாம்:சம்மரில் இந்தியாவில் சுற்றி பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கு!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com