
முன்பெல்லாம் ரிசார்டுகள் என்றாலே புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மட்டுமே என்ற எண்ணம் மக்கள் மனதில் இருந்தது. ஆனால் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதன் மீதான பார்வை மாறி குடும்பத்துடன் செல்லும் இடமாகவும் ரிசார்டுகள் மாறி வருகின்றன. அதிலும் சென்னை போன்ற நகரங்களில் குடும்பத்துடன் விடுமுறை நாட்களில் ரிசார்டுகளுக்கு செல்வது மிகவும் சகஜமாக மாறி விட்டது.
வார இறுதி நாட்களில் தேவையான பொருட்களை மட்டுமே எடுத்து கொண்டு ரிசார்ட் புக் செய்து கிளம்பி விடுகின்றனர். அங்கு போய் சமைத்து சாப்பிடுவது, விளையாடுவது, நீச்சல் குளத்தில் ஆட்டம் போடுவது என பொழுதை வித்தியாசமாக கழிக்கின்றனர். குழந்தைகளுக்கு பார்க் முதற்கொண்டு அனைத்து வசதிகளை கொண்ட ஏகப்பட்ட ரிசார்டுகள் சென்னைக்கு அருகில் உள்ளன. அதுக் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் லோ பட்ஜெட் தொடங்கி மிடில் பட்ஜெய், ஹய் பட்ஜெட் வரை அனைவரின் வசதிகேற்ப பல ரிசார்டுகள் உள்ளன. புக்கிங் செய்துவிட்டு செல்லவும் வசதிகள் உள்ளன. விருப்பத்திற்கே ரிசார்டுகளை தேர்வு செய்து குடும்பத்துடன் தங்கலாம். சமைக்க விரும்பாதவர்கள் உணவு பரிமாறும் வசதி கொண்ட ரிசார்டுகளும் இங்கு பல உள்ளன.

சென்னை ஓம்எம்ஆரில் வில்லா லுக்கில் ஏகப்பட்ட ரிசார்டுகள் உள்ளன. விடுமுறை நாட்களில் இங்கு கலை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், பாரம்பரிய திருவிழாக்கள் ஆகியவை நடைபெறும். சில ரிசார்டுகளில் போட்டிகளும் வைக்கப்பட்டு பரிசுகளும் வழங்கப்படும்.

சென்னைக்கு அருகில் இருக்கும் கேளம்பாக்கத்தில் பல ரிசார்டுகள் வரிசைக்கட்டி இருக்கின்றன. புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் சில ரிசார்டுகளில் ஸ்பெஷல் நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். கேப் ஃபையர் போன்ற வசதிகளும் இங்கு உள்ளன.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com