சோழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் தஞ்சை பெரிய கோவில் ஆச்சரியம் நிறைந்தது மட்டுமில்லை பல மர்மங்களும் நிறைந்தது. இன்று வரை பல மர்மங்களுக்கு விடை கிடைக்காமல் ஆராய்ச்சியாளர்கள் குழம்பி வருகின்றனர். பாதாள வழி தொடங்கி ரகசிய அறை வரை இன்றும் இந்த கோயிலில் வெளியில் தெரியாத பல விஷயங்கள் ரகசியங்களாக வைக்கப்பட்டுள்ளன.
இன்று பலரும் பிரகதீஸ்வரர் கோயில் என அழைக்கப்படும் தஞ்சை பெரிய கோயில், இதற்கு முன்பு ராஜராஜேஸ்வரர் கோயில் என்றே அழைக்கப்பட்டது. பின்பு மராட்டியர்களால் இந்த பெயர் மாற்றம் வந்தது எனவும் கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்:தமிழ்நாட்டில் இருக்கும் பிரபல கோயில்களை பார்க்க மறந்துடாதீங்க
பிரமிக்க வைக்கும் கோபுரம்
தஞ்சை பெரிய கோவில் என்றதும் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அதன் கோபுரம். இந்த கோபுரத்தின் முக்கியமான சிறபம்சம் என்னவென்றால் சூரியன் உச்சியில் நின்று கொளுத்தினாலும் கூட கோபுரத்தின் நிழல் தரையில் விழாது. இங்கு இருக்கும் கலச வடிவிலான மேற்கூரை கல் சுமார் 80 டன் எடை கொண்ட ஒற்றை கல்லால் செய்யப்பட்டது என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். இதை மேலே கொண்டு போய் எப்படி வைத்தனர் என்று யோசித்தால் அது அதை விட ஆச்சரியம்.
வளரும் நந்தி சிலை
பக்தர்கள் பலரும் அதிகம் யோசித்து ஆச்சரியம் அடைவது சிவப்பெருமானுக்கு எதிரில் இருக்கும் நந்தி சிலையை நினைத்து தான். ராஜராஜ சோழன் வைத்த நந்தி சிலை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே சென்றதாக கூறப்படுகிறது. அப்படி நந்தி சிலை வளர்ந்து கொண்டே சென்றதால் மராடியர்கள் அதிர்ச்சி அடைந்து அந்த சிலையை எடுத்து கோயில் பிரகாரத்தில் வைத்துவிட்டு வேறொரு நந்தி சிலையை அந்த இடத்தில் வைத்ததாக கூறப்படுகிறது.
தஞ்சை பெரிய கோயில் குஞ்சரமல்லன் ராஜராஜ பெருந்தச்சன் எனும் கட்டிடக்கலை நிபுணர்களால் கட்டப்பட்டது என வரலாற்று குறிப்புகள் கூறுகின்றனர். இவர் தான் வாஸ்து சாஸ்திர கட்டிக்கலையின் வல்லுநர் எனவும் கூறப்படுகிறது. கோயிலில் ரகசிய சுரங்கபாதை இருப்பதாக பேச்சுக்கள் உலா வருகின்றன. போரின் போது நாட்டு மக்கள், ராணிகள், முனிவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ரகசியமாக செல்ல இந்த வழியை பயன்படுத்தினர் எனவும் கூறப்படுகிறது.
1,30,000 டன் கிரானைட் கற்களை பயன்படுத்தி தஞ்சை கோயில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கோயிலில் இருக்கும் கல்வெட்டில் கோயிலை நிறுவியது ராஜராஜ சோழன் என்று மட்டுமில்லாமல் கட்டிடக்கலை வல்லுநர்கள் அவர்களுக்கு சலவை தொழில் செய்த உதவியாளர்கள் தொடங்கி, முடி திருத்த செய்தவர்கள் வரை ஒவ்வொருவரின் பெயர்களும் கல்வெட்டில் இருப்பது ராஜ ராஜ சோழனின் பரந்து விரிந்த உள்ளத்தை காட்டுகிறது.
தஞ்சை மக்கள் மட்டுமில்லை உலக தமிழர்கள் அனைவரும் பெரிய கோயிலை தங்களது பெருமையாக நினைத்து போற்றி வணங்குகின்றனர்.
இந்த பதிவும் உதவலாம்:பாண்டிச்சேரி சுற்றுலா செல்ல பெஸ்ட் டைம் எது தெரியுமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation