Pondicherry Visit : பாண்டிச்சேரி சுற்றுலா செல்ல பெஸ்ட் டைம் எது தெரியுமா?

பாண்டிச்சேரி சுற்றுலா செல்ல சிறந்த நேரம் மற்றும் பாண்டிச்சேரியில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். பட்ஜெட்டில் சுற்றுலா செல்ல நினைப்பவர்களுக்கு பாண்டிச்சேரி சரியான தேர்வு. 

pondicherry tour travel

விழுப்புரத்தை தாண்டி இருக்கும் பாண்டிச்சேரி இந்தியாவின் யூனியன் பிரதேசமாகும். வெறும் சுற்றுலாதலமாக இல்லாமல் இங்கு பல வரலாற்று விஷயங்கள் புதைந்துள்ளன. கலை, அறிவியல் என இங்கு பார்த்து வியக்கூடிய ஏகப்பட்ட இடங்கள் உள்ளன. விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் வெளியில் சென்று வர வேண்டும் என நினைப்பவர்கள் நிச்சயம் பாண்டிசேரியை தேர்வு செய்யலாம்.

பட்ஜெட்டில் முடிய கூடியது. அதே நேரம் சிறந்த அனுபவத்தையும் தரக்கூடியது. பாண்டிச்சேரி பற்றி பலரும் நினைப்பது இதுதான். கட்ற்கரை, பிரெஞ் காலணி தவிர இங்கு பார்ப்பதற்கு இங்கு எதுவுமில்லை என, ஆனால் உண்மையில் பாண்டிச்சேரியை சுற்றி பார்க்க 2 நாட்கள் போதாது. அந்த அளவுக்கு இங்கு பார்க்க பல விஷயங்கள். அதுக் குறித்து விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.

பாரதியார் இல்லம்

பாண்டிச்சேரி செல்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடத்திலும் இதுவும் ஒன்று. பிரெஞ்சு கட்டடக்கலையுடன் பாரதியார் தங்கிருந்த இல்லத்தை பார்க்க நாள் முழுவதும் ஆயிரக்கணக்கான சுற்றுலாவாசிகள் இங்கு வந்து செல்கின்றனர். இங்கு பாரதியார் எழுதிய கடிதங்கள், அவரின் அரிய புகைப்படங்கள் ஆகியவை பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

ஊசுடு ஏரி சரணாலயம்

800 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்திருக்கும் ஊசுடு ஏரி பறவைகளின் சரணாலயம் ஆகும். சீசன் டைம்மான நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை அரிய வகை பறவைகள் இங்கு படையெடுத்து வருவதை பார்க்கலாம். குழந்தைகளுக்கு இந்த சரணாலயத்தை காட்ட மறந்து விடாதீர்கள். கூடவே அரசாங்கம் படகு சவாரியும் ஏற்பாடு செய்து வைத்துள்ளது.

pondichery beach

பாரடைஸ் பீச்

சிறு தீவு போல் காட்சியளிக்கும் இந்த இடம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இடமாக இருக்கும். மிதக்கும் படகு வீடு, படகு சவாரி, மெகா சைஸ் பலூன் கேம் என என் ஜாய் செய்யலாம். காலை விடியலை சூரியனுடன் தொடங்கலாம்.

பிரெஞ்சு காலணி

பாண்டிச்சேரியில் உள்ள பிரெஞ்சு காலணியை பற்றி விவரிக்க ஒரு பதிவு போதாது. பாண்டிச்சேரி செல்பவர்கள் இங்கு செல்லாமல் திரும்ப மாட்டார்கள். மிக மிக அழகான இடம். கண்களை கவரும் ஓவியங்கள், பிரெஞ்சு கட்டிடக்கலை என அழகின் சொர்க்கம். இப்பகுதியில் பல கடைகள் மற்றும் கஃபேக்கள் உள்ளன.

pony frrench colony

அருங்காட்சியகம்

பல வரலாற்று சின்னங்கள் இங்கு உள்ளன. இங்கு புராண காலத்துச் சிற்பங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. கோச்வண்டி, பல்லக்கு, மாட்டுவண்டி, கற்காலத்தைச் சேர்ந்த கோடரி ஆகியவையும் இங்கு உள்ளன. ஓய்வு எடுக்க பூங்காவும் இங்கு உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு மிகவும் பயன் தரும் இந்த விசிட்.

pondychery church

சிறந்த நேரம்

இங்கே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் பொறுமையாக ரசித்து பார்க்க, சுற்றுலாவை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க பாண்டிச்சேரிக்கு அக்டோபர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை செல்வதே சரியான தேர்வு. அதன் பின்பு பாண்டிச்சேரியில் வெயில் மண்டையை பிளக்க தொடங்கிவிடும். கடற்கரை போன்ற பல இடங்களை ரசிக்க முடியாது.

இந்த பதிவும் உதவலாம்:உலகமே வியந்து பார்க்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வரலாறு

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP