Coimbatore Places : கோயம்புத்தூர் சுற்றுலாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்

கோயம்புத்தூரில் சுற்றி பார்க்க வேண்டிய் சுற்றுலா இடங்களை பற்றி இந்த பதிவில் பர்ப்போம்.  கோவை பக்கம் செல்பவர்கள் கட்டாயம் இந்த இடங்களை பார்க்க மிஸ் பண்னிடாதீங்க.  மிக்ச் சிறந்த அனுபவத்தை தரும் இடங்கள் பல கோவையில் உள்ளன. 

 
coimbatore places

கோயம்புத்தூர் என்றதும் வழக்கமான இடங்களை தான் சுற்றுலா தலமாக அதிகம் குறிப்பிடப்படும். ஆனா இந்த பதிவில் கோயம்புத்தூரில் அதிகம் பலருக்கும் தெரியாத, அதே நேரம் கட்டாயம் பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்களை பற்றி இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

1. மருதமலை

முருகனின் ஏழாவது படைவீடு என்று பக்தர்களால் போற்றப்படுகிறது.. கோவை ரயில் நிலையத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சுமார் ஆயிரம் படிக்கட்டுக்கள் மலை ஏறிச்சென்று முருகனை தரிசித்து வரலாம் ல்லது பஸ்சிலும் செல்லலாம்.

2. வெள்ளியங்கிரிமலை

இதற்கு தென்கயிலாயம் என்றும் பெயர். வெள்ளியங்கிரி மலையில் சித்ரா பௌர்ணமியன்று பக்தர்கள் சிவனை காண செல்கிறார்கள்.அங்குள்ள சிவபெருமானை தரிசனம் செய்துவிட்டு கீழிறங்குகிறார்கள். இதை வருடந்தோறும் நேர்த்திக்கடனாகவே செய்கிறார்கள்.

isha yoga

3. ஈஷா யோகா

கோவையின் மிகப் பெரிய சுற்றுலா தலமாக மாறியுள்ளது ஈஷா யோகா மையம். ஏழு கண்டங்களை கொண்ட பிரம்மாண்ட லிங்கம், ஆதியோகி சிலை, புனித நீராடல் ஆகியவற்றில் பொழுதை கழிக்கலாம்.

4. ஆதிகோனியம்மன் கோயில்

கோவை நகரின் நடுமையத்தில் இருக்கும் அம்மனை கோவைக்கு வரும் பக்தர்கள் மட்டுமல்ல, சுற்றுலாப் பயணிகளும் இங்கு வந்து அம்மனை தரிசிக்காமல் செல்வதில்லை.

kovai famous

5. பர்லிக்காடு படகு சவாரி

கோவையில் இருக்கும் பில்லூர் அணையில்வனத்துறையே பரிசல் சவாரி செய்கிறது. குடில் அமைத்து மக்களை பரிசல் சவாரிக்கு இட்டுச் செல்கிறார்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்தான் இதற்கு அனுமதி.

இந்த பதிவும் உதவலாம்: தமிழ்நாட்டில் இந்த இடங்களில் மட்டும் தான் துணிகளின் விலை மிக குறைவு

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP