தமிழ்நாட்டில் இருக்கும் மிகவும் முக்கியமான பிரபலமான துணி மார்க்கெட் குறித்து இந்த பதிவில் பார்க்க போகிறோம். இந்த இடங்களில் மிக மிக குறைந்த விலையில் துணிகளை வாங்கலாம் என்பது கூடுதல் குறிப்பு. வியாபாரம் செய்பவர்கள், கல்யாணத்திற்கு துணி எடுப்பவர்கள், மொத்தமாக டஜன் கணக்கில் துணி எடுப்பவர்கள் அனைவருக்கும் இந்த பதிவு நிச்சயம் உதவும்.
வாருங்கள். இப்போது தமிழ்நாட்டில் இருக்கும் பிரபல துணி மார்க்கெட் லிஸ்டுகளை பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்:குற்றாலத்தில் குளிக்க எத்தனை ஃபால்ஸ் இருக்கு தெரியுமா?
ஈரோடு கனி மார்க்கெட் எனச் சொல்லப்படும் துணி சந்தை மொத்த விலை விற்பனை மார்க்கெட்டாக உள்ளது. தேவைக்கேற்ப வாடிக்கையாளர்கள் ஷாப்பிங்கும் செய்யலாம். ஈரோடு பன்னீர் செல்வம் பார்க் அருகாமையில் இந்த துணி மார்க்கெட் அமைந்துள்ளது. இது இரவு நேரத்திலும் செயல்ப்படக்கூடியது. பெண்கள், ஆண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் ஏற்ற அனைத்து விதமான உடைகளும் இங்கு கிடைக்கும்.
பனியன் மற்றும் துணிகள் உற்பத்தில் முதலிடத்தில் வகிக்கும் திருப்பூரில் ஏகப்பட்ட துணி மார்க்கெட்டுகள் உள்ளன. பனியன் மார்க்கெட் தொடங்கி 20 ரூ மார்க்கெட், மொத்த விலை விற்பனை அங்காடி என வரிசைக்கட்டி பல துணி சந்தைகள் இங்கு இயங்கி வருகின்றன. இங்கு மிக மிக குறைந்த விலையில் துணிகளை வாங்கலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் பர்கூர் துணி மார்க்கெட் மிகப் பெரியது. இங்கு பெண்களுக்கான சேலைகள் மற்றும் குழந்தைகளின் ஆடைகள் மிக குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. மொத்த வியாபார வசதியும் இங்கு உள்ளது. தமிழ்நாட்டில் இருக்கும் பல வியாபாரிகள் இங்கு வந்து துணிகளை எடுத்து சென்று வியாபாரம் செய்கின்றனர்.
சென்னையில் மிகப் பெரிய துணி மார்க்கெட்டாக உள்ளது வண்ணாரப்பேட்டை. இங்கு மொத்த விலை தொடங்கி தனி விற்பனை வரை அனைத்தும் மிகவும் பிரபலம். சென்னையில் இருக்கும் பல சிறுகடை வியாபாரிகள் இங்கு மொத்த விலையில் துணிகளை எடுத்து நகரம் முழுவதும் வியாபாரம் செய்வார்கள். மிக குறைந்த விலையில் இங்கு சேலைகள் கிடைக்கும்.
இந்த பதிவும் உதவலாம்:சென்னை தியாகராய நகர் எதுக்கெல்லாம் ஃபேமஸ் தெரியுமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com