சுற்றுலா என்பது வெறும் ஊரை சுற்றி பார்ப்பது மட்டுமில்லை, இயற்கையுடன் சேர்ந்து, வேலைகளை மறந்து மன மகிழ்ச்சியுடன் இருப்பதும் தான். நிறைய பணம் இருந்தால் தான் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல முடியும் என நினைத்து கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு. விமானத்தில் பறந்து, காரில் பயணித்து. கப்பலில் ஏறி ஊரை சுற்றி பார்த்து மட்டும் சுற்றுலா இல்லை. இயற்கை எழில் கொஞ்சும் அழகான இடங்கள், ஊருக்கு அருகில் இருக்கும் மலைப்பிரதேசங்களை குடும்பத்துடன் சென்று பார்த்து, அன்றைய பொழுதை கழிப்பதும் சுற்றுலா தான்.
இப்படி நம்மூரில் ஏகப்பட்ட இடங்கள் உள்ளன. அந்த வகையில் குறைந்த செலவில் டூர் செல்ல நினைப்பவர்கள் போக வேண்டிய இடங்கள் குறித்து இந்த பதிவில் பகிர்கிறோம். படித்து பயனடையுங்கள். இந்த கோடை காலத்தில் வீட்டில் இருக்கும் குழந்தைகள் பலரும் டூர் செல்ல அதிகம் விரும்புவார்கள். அவர்களின் ஆசையை நிறைவேற்ற பட்ஜெட்டில் செல்லக்கூடிய டூர் இடங்களை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்:தமிழ்நாட்டில் இருக்கும் நீர்வீழ்ச்சிகள் விசிட் அடிக்க தயாராகுங்கள்
குடும்பத்துடன் செல்ல மிகச் சிறந்த இடம். கேரளாவில் தேக்கடி, மூணார், கொச்சின், ஏர்ணாக்குளம், ஆலாப்புழா வயநாடு ஆகிய இடங்களில் சுற்றி பார்க்க பல சுற்றுலா இடங்கள் உள்ளன. ஹோட்டல்களில் செலவு அதிகம் என்பதால் சுற்றுலா வாசிகள் தங்க வீடுகளும் வாடைக்கு விடப்படுகின்றன. குடும்பத்துடன் சென்று 3 நாட்கள் தங்கி விடுமுறையை கழிக்கலாம். 4 பேர் உள்ள குடும்பம் செல்ல அதிகப்பட்சமாக 30,000 இருந்தால் போதும். அதுமட்டுமில்லை சம்மர் சீசனில் கேரளா சுற்றுலா செல்ல, ஆன்லைனிலும் பல ஆஃபர்கள் அறிவிக்கப்படுகின்றன. அதை தேர்ந்தெடுத்தால் செலவை இன்னும் குறைக்கலாம்.
கர்நாடகா, மைசூர், கூர்க் போன்ற இடங்களுக்கு சுற்றுலா செல்வதும் பட்ஜெட்டில் முடியகூடியது. கூர்க், இந்தியாவின் காஷ்மீர் என சொல்லப்படுகிறது. சுற்றி மலை, அடுத்தடுத்த நீர்வீழ்ச்சிகள், சாக்லேட் தொழிற்சாலை, மைசூர் அரண்மனை இப்படி பல இடங்களை கண்டுகளிக்கலாம். 2 பேர் இருக்கும் குடும்பம் செல்ல ரூ. 25,000 போதுமானதாக இருக்கும்.
தமிழ்நாட்டில் இருக்கும் ஊட்டி, கொடைக்கானல், நீலகிரி, ஏலகிரி, ஏற்காடு போன்ற இடங்களும் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல ஏற்ற இடங்களாக உள்ளன. சீசன் நேரத்தில் சென்றால் செலவு அதிகம் ஏற்படும். இடைப்பட்ட நேரத்தில் சென்றால் செலவை மிச்சப்படுத்தலாம். பட்ஜெட்டில் டூர் செல்ல திட்டமிடுபவர்கள் கார் அல்லது வேனில் இந்த இடங்களுக்கு சென்று வரலாம்.
ஆந்திராவில் பார்க்க திருப்பதி மட்டுமில்லை அதையும் தாண்டி பல இடங்கள் உள்ளன. குறிப்பாக ஆந்திரா மாநிலத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அரக்கு பள்ளத்தாக்கு இயற்கையின் அதிசயமாக பார்க்கப்படுகிறது. வியக்க வைக்கும் மலைகளின் அழகு, கொட்டும் அருவிகள், காபி தோட்டங்கள் என உங்களுக்கு புதுவித அனுபவத்தை கட்டாயம் தரும். பட்ஜெட்டில் முடியக்கூடிய டூர் பிளானாகவும் இது இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம்:தனுஷ்கோடி சுற்றுலா.. விசிட் செய்ய வேண்டிய இடங்கள்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com