
சம்மர் நெருங்கி விட்டது, ஸ்கூல், காலேஜ்களுக்கும் லீவ் விட்டாச்சு. இந்த நேரத்தில் மிடில் கிளாஸ் மக்கள் தொடங்கி அப்பட் கிளாஸ் வரைக்க்கும் குடும்பத்துடன் சமம்ர் வெக்கேஷன் சென்று வரலாம் என நினைப்பார்கள்.சென்னையில் இருப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்பார்கள். இன்னும் சிலர் ஒரு 4 நாள் தங்கும்படி டூர் போகலாம் என நினைப்பார்கள்.
அந்த வகையில் கம்மியான செலவில் டூர் போக நினைப்பவர்களுக்கு இந்த பதிவு கட்டாயம் உதவும். வாருங்கள் பட்ஜெட்டில் முடிய கூடிய டூர்களை பற்றி பார்ப்போம்.
இந்த பதிவும் உதவலாம்:கோயம்புத்தூர் சுற்றுலாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்
ஏழைகளின் ஊட்டி என சொல்லப்படும் ஏற்காடு பட்ஜெட்டில் முடிய கூடிய டூர் பேக்கேஜில் முதலிடத்தில் உள்ளது. வெறும் ஏற்காடு மட்டுமில்லை செலம், நீலக்கிரியை பார்த்து விட்டு அப்படியே ஏற்காடு செல்லலாம். அங்கு சுற்றி பார்க்க ஏகப்பட்ட இடங்கள் சேர்வராயம் மலை தொடர் தொடங்கி பிர்டசித்தி பெற்ற கோயில்கள், ஃபால்ஸ், டீ எஸ்டேட், பூக்கள் கண்காட்சி, பூங்கா இப்படி குடும்பத்துடன் சுற்றி பார்க்க நிறைய இடங்கள் உள்ளன. ஒருநபருக்கு 4000 முதல் 5000 இருந்தால் போது சாப்பாடு, தங்கும் வசதி எல்லாம் சேர்த்து 2நாட்களுக்கு ஏற்காடு சுற்றுலாவை ரசிக்கலாம்.

தென் மாவட்டங்களுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என நினைப்பவர்கள் மதுரை டூ கன்னியாகுமரி வரை சென்று வரலாம். 3 நாட்கள் இந்த சுற்றுலாவை ரசிக்கலாம். மதுரை, கன்னியாகுமர்- ராமேஸ்வரம் ஆகியவற்றை ஆசை தீர சுற்றி பார்த்து ஊ திரும்பலாம். ரயில் பயணம் என்றால் இன்னும் செலவு குறைவு. ஒருநபருக்கு ரூ. 3500 முதல் ரூ.4500 வரை செலவாகும்.

சமீபகாலமாக என்னையில் இருந்து பலரும் கோயம்புத்தூர் சுற்றுலா செல்வதை பார்க்க முடிகிறது. இங்கு மலைகளின் தரிசினம், இயற்கையின் அழகு, நீர்வீழ்ச்சி என ரசிக்க பல இடங்கள் உள்ளன. டெண்ட் போடும் வசதிகளும் அதிகம். ஒரு 3 நாளைக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்ல கோவை மிகச் சிறந்த இடம். ஒரு நபருக்கு உணவு, பயண செலவு எல்லாம் சேர்த்து ரூ. 4000 போதுமானது.
இந்த பதிவும் உதவலாம்:சென்னையிலிருந்து கிளம்பும் டூர் பயணம் ஐஆர்சிடிசியின் முக்கிய அறிவிப்பு
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: shutterstock
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com