திறமை இருந்தால் உலகில் யார் வேண்டுமானாலும் ஒரே நாளில் உச்சத்தை அடையலாம் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. டிஜிட்டல் பயன்பாட்டுக்கு பரிமாணித்துள்ள இவ்வுலகம் திறமைசாலிகளை கொண்டாட தயங்கியதில்லை. கடந்த சில வாரங்களாக இன்ஸ்டா, யூடியூப், டிக் டாக் செயலி ஷார்ட்ஸ் வீடியோவில் வைரலாகி வருபவர் சில்வி குமலாசாரி. நிகழ்ச்சி ஒன்றில் இவர் பாடிக் கொண்டே நடனமாடும் வீடியோ ஒன்று பல லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது. குறிப்பாக அந்த வீடியோவை தமிழர்களும், மலையாளிகளும் அதிகளவில் பார்த்துள்ளனர். அப்பாடல் எந்த மொழி என பலருக்கும் தெரியவில்லை என்றாலும் இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகின்றனர்.
சில்வி குமலாசாரி
இந்தோனேசிய பாடகரான சில்வி குமலாசாரி கலை நிகழ்ச்சி ஒன்றில் பாடும் அனான் டா சாயே தமிழர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்தோனேசியாவில் ஜாவானீஸ் இசை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் இவர். டிக் டாக் வீடியோக்களால் புகழடைந்த சில்வி குமலாசாரி பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு சில்வி குமலாசாரி பாடிய கூலிக் அகூ டாங் பாடலின் முதல் சில வரிகள் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அழகான குரலில் வளைந்து நெளிந்து அவர் ஆடுவது ரசிக்கும்படியாக உள்ளது. அவர் பாடும் பாடலை தமிழர்கள் தங்களுக்கு ஏற்ப மாற்றிவிட்டனர்.
சில்வி குமலாசாரி பாடும் வரிகள்
அனான் டா பாட் சாயே அபாட் டி டீ டேனா அபாட் டி யா
அபாட் டி டீ டேகூ அபாட் டீ டோ என பாடியவாறு இடுப்பை வளைத்து நெளித்து ஆடுகிறார். தமிழர்களோ அப்பாடலை அண்ணண பாத்தியா அப்பாட்ட கேள் கேள் என மாற்றி பாடி ரசித்து வருகின்றனர். இந்த பாடல் 10 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. அதில் நூற்றுக்கணக்கான பதிவுகள் தமிழில் உள்ளன. பாடல் துளி அளவும் புரியவில்லை என்றாலும் தமிழர்கள் அப்பாடலை ரசித்து வருகின்றனர்.
யார் இந்த சில்வி குமலாசாரி ?
இந்தோனேசியா நாட்டின் துலுங்காகுங் பகுதியை சேர்ந்தவர் சில்வி குமலாசாரி. இவர் பைசல் பகரூதீன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். ரேஸிங் வீரரான பைசல் பகரூதின் அந்நாட்டின் சிறந்த ரேஸர்களில் ஒருவர். சில்வி குமலாசாரியின் நடன அசைவுகளை பார்க்கவே பலரும் அவருடைய நிகழ்ச்சிக்கு செல்கின்றனர்
பாடும் மொழி புரியவில்லை என்றாலும் ரசிக்கும்படி இருப்பதால் தமிழர்களும் இந்தோனேஷிய பாடலை விருப்பத்துடன் பாடி வருகின்றனர்.
மேலும் படிங்கInspiring Women : லிஸிபிரியா கங்குஜம் யார் ? சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக 7 வயதில் போராட்டம்
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation