காளிதாஸ் ஜெயராமின் மனைவி தாரிணி காலிங்கராயர் யார் தெரியுமா ? மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற பேரழகி

நடிகர் ஜெயராமின் மகனான காளிதாஸ் ஜெயராம் திருமணம் செய்து கொண்ட தாரிணி காலிங்கராயர் யார் தெரியுமா ? மாடலிங்கில் ஆர்மிக்க இவர் 2019ல் மிஸ் தமிழ்நாடு பட்டமும் வென்று இருக்கிறார். திருமணம் முடிந்த கையோடு ஜெயராம் குடும்பம் ஹனிமூன் கொண்டாட பின்லாந்து சென்றுள்ளது.
image

தமிழ் மற்றும் மலையாள படங்களில் இளம் நட்சத்திரமாக வலம் வரும் காளிதாஸ் ஜெயராம் டிசம்பர் 7ஆம் தேதி தனது நீண்ட நாள் காதலியான தாரிணி காலிங்கராயரை திருமணம் செய்துகொண்டார். குடும்ப உறவுகளும், நெருங்கிய நண்பர்களும், அரசியல் மற்றும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மட்டும் இந்த நிக்ழவில் பங்கேற்றனர். இருவரின் திருமணம் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. யார் இந்த தாரிணி காலிங்கராயர் ? காளிதாஸ் ஜெயராமுடன் எப்போது காதல் மலர்ந்தது ? வாருங்கள் பார்க்கலாம்.

தாரிணி காலிங்கராயர் காளிதாஸ் ஜெயராம்

தாரிணி காலிங்கராயர் மாடலிங் துறையில் மிகப் பிரபலமானவர். இவருடைய வயது 24. சென்னையில் பிறந்தவரான இவர் தொழில் ரீதியாக மட்டும் பிற ஊர்களுக்கு செல்பவர். நமக்கு கிடைத்த தகவலின்படி தாரிணி காலிங்கராயர் பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். இவரையும், தங்கையையும் தாயார் மிகுந்த சிக்கல்களுக்கு மத்தியில் கஷ்டப்பட்டு வளர்த்துள்ளார்.

தாரிணி காலிங்கராயரின் கல்வி

தாரிணி காலிங்கராயர் தனது பள்ளிப்படிப்பை சென்னையில் உள்ள பவன் ராஜாஜி வித்யாஷரத்தில் பயின்றுள்ளார். அதன் பிறகு எம்.ஓ.பி.வைஷ்ணவ மகளிர் கல்லூரியில் விஸ்காம் முடித்துள்ளார். படிக்கும் போதே அவருக்கு மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது. அவ்வப்போது விளம்பரங்களில் நடிக்க முயற்சித்துள்ளார்.

16 வயதிலேயே மாடலிங்கில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. கல்லூரிப் பருவத்தில் சினிமா இயக்கம் குறித்தும் அறிந்துள்ளார். 2021ல் நடைபெற்ற மிஸ் திவா போட்டியில் இறுதிப்போட்டிவரை முன்னேறியவர் இந்த தாரிணி காலிங்கராயர். இதன் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தார். 2022ல் மிஸ் திவா யுனிவர்ஸ் அழகிப்போட்டியிலும் பங்கேற்றுள்ளார். தாரிணி காலிங்கராயர் 2019ல் மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்றவர். அதே ஆண்டில் மிஸ் தென் இந்தியா போட்டியில் இரண்டாமிடம் பிடித்திருக்கிறார். போட்டோகிராஃபியில் கொண்ட ஈடுபாடு காரணமாக அடிக்கடி இன்ஸ்டா பக்கத்தில் தனது மாடலிங் புகைப்படங்களை வெளியிடுவார். மாடலிங்கை தவிர்த்து டிராவலிங், போட்டோ ஷூட் ஆகியவற்றுக்கு அதிக நேரம் செலவிடக் கூடியவர்.

மேலும் படிங்கபி.வி.சிந்துவுக்கு டிசம்பர் 22ல் திருமணம்; மாப்பிள்ளை யார் தெரியுமா ?

இவருடைய சொத்து மதிப்பு ஒரு கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றனர். அழகு சாதனப் பொருட்களின் விளம்பரங்களில் நடிப்பதன் மூலமாக நல்ல வருவாய் ஈட்டுகிறார். சென்னையில் இவருக்கு சொந்தமாக ஒரு வீடும், ஆடி காரும் உள்ளது. 2022ல் இருந்து காளிதாஸ் ஜெயராம் தாரிணி காலிங்கராயர் ஜோடியாக சுற்றும் புகைப்படங்கள் வெளிவந்தன. இந்த நிலையில் பெற்றோரின் சம்மதத்தோடு இருவரும் டிசம்பர் 7ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP