Alya Manasa : சீரியல் நடிகை ஆல்யா மானசாவின் நியூ லுக்! வைரல் போட்டோஸ்..

நடிகை ஆல்யா மானசா இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட லேட்டஸ்ட் படங்கள் வைரலாகி வருகிறது.

 
alya manasa modern dress look

சின்னத்திரையில் முன்னணி பிரபலமாக வலம் வரும் ஆல்யா மானசா மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். அதன் பின்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் செம்பா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார்.இந்த சீரியலில் ஆல்யா மானசாவுக்கு ஜோடியாக சஞ்சீவ் கார்த்திக் நடித்தார். இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். ராஜா ராணி 2 சீரியலில் ஆல்யா மானசா சந்தியாவாக நடித்து வந்தார். இரண்டாவது முறை கர்ப்பமானதால் சீரியலில் இருந்து விலகினார். இவர்களுக்கு ஐலா, அர்ஷ் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

சின்னத்திரை நட்சத்திரங்களில் பலர் தங்களுக்கென தனி யூடியூப் சேனல் ஒன்றை வைத்துள்ளனர். அதே போல் சஞ்சீவ் , ஆல்யா மானசாவும் யூடியூப் சேனல் வைத்து தொடர்ந்து வீடியோ பதிவிட்டு வருகின்றனர். குழந்தை பிறந்த பின்பு உடல் எடையை குறைத்த ஆல்யா சன் டிவியில் இனியா சீரியல் மூலம் கம் பேக் கொடுத்தார். இந்த சீரியலில் ஆல்யா மானசாவுக்கு ஜோடியாக ரிஷி நடிக்கிறார். இந்த சீரியல் ரசிகர்களுக்கு பிடித்த சீரியல் லிஸ்ட்டில் இடம் பிடித்துவிட்டது.

ஆல்யா மானசா கடைத்திறப்பு விழாக்களுக்கும் தொடர்ந்து சென்று வருகிறார்.அதை இன்ஸ்டாகிராமில் வீடியோவாகவும் பதிவிடுகிறார். நடிகை ஆல்யா மானசா அடிக்கடி போட்டோ ஷூட் செய்து பதிவிடுவார். இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

alya manasa latest clicks

காஸ்ட்யூம்

நடிகை ஆல்யா மானசா இந்த புகைப்படத்தில் பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்ட மஞ்சள் - பிங்க் காம்போ உடையை அணிந்திருக்கிறார். இந்த லுக்கில் பார்க்க செம்ம ஸ்டைலாக இருக்கிறார். உடைக்கு ஏற்றமாதிரி காஸ்ட்யூம் மற்றும் மேக்கப் செய்திருக்கிறார்.ஆல்யா மானசாவின் இந்த படங்கள் லைக்ஸை குவித்து வருகிறது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP