
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா ரோலில் நடிப்பவர் விஜே தீபிகா. இதற்கு முன்பு லோக்கல் சேனலில் ஆங்கராக இருந்தார். பின்பு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அவருக்கு ஐஸ்வர்யா ரோலில் நடிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் கண்ணன் ரோலில் நடிக்கும் சரவண விக்ரமுக்கு ஜோடியாக தீபிகா நடித்து வந்தார். இவர்களின் கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது. இந்த சமயத்தில் தான் முகப்பரு காரணமாக தீபிகா சீரியலில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதில் சாய் காயத்ரி நடித்து வந்தார்.
சரவண விக்ரமும் தீபிகாவும் பயங்கர க்ளோஸ் நண்பர்கள். இருவரும் ஒன்றாக சேர்ந்து டிக் டாக், ரீல்ஸ், ஷார்ட் ஃபிலிம் என கலக்கினர். இவர்கள் இருவ்ரும் காதலிப்பதாக ஏற்கெனவே இணையத்தில் வதந்திகள் பரவின. ஆனால் இருவரும் நாங்கள் நல்ல நண்பர்கள் எனவே கூறி வந்தனர். இந்நிலையில் தீபிகா மீண்டும் பாண்டியன் ஸ்டோரில் இணைந்து விட்டார். சாய் காயத்ரி விலக, மீண்டும் ஐஸ்வர்யா ரோலில் இப்போது அவரே நடித்து வருகிறார்.
நேற்றைய தினம் தீபிகா தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் வெளியிட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஸ்டோரில் ”இப்போது மட்டுமில்லை இனிவரும் நாட்களிலும் நாம் சேர்ந்து தான் இருக்க வேண்டும் ” என குறிப்பிட்டு இருந்தார். அதனுடன் சரவணன விக்ரமுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்டத்தையும் ஷேர் செய்து இருந்தார்.

தீபிகாவின் இந்த பதிவு, அவர்களின் காதலை உறிதிப்படுத்தும் வகையில் இருப்பதாக செய்திகள் இனையத்தில் உலா வருகின்றன. அதுமட்டுமில்லை கூடிய விரைவில் இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்கள் திருமணம் செய்யவுள்ளதாகவும் பேச்சுகள் அடிப்படுகின்றன. இந்த செய்திகளுக்கு கூடிய விரைவில் இருவரும் விளக்கம் அளிப்பார்கள் என தெரிகிறது.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: instagram
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com