தமிழ் சினிமாவில் சிம்ரனுக்கு அடுத்தபடியாக இடுப்பழகி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர் நடிகை வேதிகா. மும்பையில் பிறந்தவரான வேதிகா 2006ல் மதராஸி என்ற தமிழ் படத்தில் அறிமுகமாகி அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்தார். மாடலிங் துறையில் ஆர்வம் கொண்ட வேதிகா சூர்யா போன்ற பிரபலங்களுடன் விளம்பரங்களில் நடித்துள்ளார். திரையுலகில் 18 வருடங்கள் பயணித்துள்ள வேதிகா தற்போது ஓடிடியில் தடம் பதித்துள்ளார். இந்த நிலையில் ஹெர் ஜிந்தகி தமிழ் குழுவுக்கு தமிழ் திரையுலகில் பணியாற்றிய அனுபவம் குறித்து பல்வேறு சுவாரயஸ்மான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
நடிகை வேதிகாவின் சிறப்பு பேட்டி
கேள்வி : தமிழ் படங்களில் உங்களுடைய சிறந்த ஜோடி யார் ? சிம்பு, ராகவா லாரன்ஸ், சித்தார்த், அருண் விஜய்
வேதிகா : பணியாற்றிய நடிகர்கள் அனைவரிடமுமே கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது. அவர்களுடன் இணைந்து பணியாற்றியது அற்புதமான விஷயம். ராகவா லாரன்ஸ் மாஸ்டருடன் இரண்டு முறை பணியாற்றியுள்ளேன். நீண்ட நாட்களாக அவரை நன்கு தெரியும்.
கேள்வி : பரதேசி படத்தில் இயக்குநர் பாலாவுடன் பணியாற்றிய அனுபவம்
வேதிகா : பாலா சாருடன் பணியாற்றும் போது கனவு நினைவாவது போல் இருந்தது. மிகவும் சவாலான மற்றும் திறமையை வெளிப்படுத்தும் வகையில் கிடைத்த படங்கள் எல்லாவற்றுக்கும் பரதேசி படமே காரணம். பரதேசி படத்தின் சூட்டிங்கின் போது தூங்குவது கடினமாக இருந்தது. ஏனெனில் தேசிய விருந்து வென்ற பாலா சார் போன்ற இயக்குநருடன் பணியாற்றுவதில் ஆவலோடு இருந்தேன். ஒரு நடிகையாக அங்கீகாரம் கிடைத்து எனது வாழ்க்கையை மாற்றிய படம் என்றால் அது பரதேசி தான்.
கேள்வி : தமிழ் சினிமாவில் எந்த நடிகருடன் இணைந்து பணியாற்ற ஆசை ?
வேதிகா : ரஜினி சார், அஜித் சார், விஜய் சார். இவர்கள் அனைவருடனும் பணியாற்ற ஆசை. அவர்களுடைய பணி மெய்சிலிர்க்க வைக்கும்.
கேள்வி : தமிழ் படத்தில் மீண்டும் எப்போது உங்களை காணலாம் ?
வேதிகா : இரண்டு தமிழ் படங்களில் நடித்து வருகிறேன். கஜானா என்ற படம் உருவாகியுள்ளது. மற்றொரு தமிழ் படம் சூட்டிங்கில் உள்ளது. அது மிகவும் சுவாரயஸ்மான படம். இதற்கு முன்பு இதுபோன்ற கதாபாத்திரத்தில் நான் நடித்ததில்லை. ஜங்கிள் என்ற திகில் படம் 2025ல் வெளியாகவுள்ளது.
கேள்வி : உங்களுக்கு மிகவும் பிடித்த மூன்று படங்கள்
வேதிகா : மூன்றாம் பிறை, சிண்டலர்ஸ் லிஸ்ட், லைஃப் இஸ் பியூட்டிஃபுல்
கேள்வி : இந்திய சினிமாவில் வியந்து பார்த்த நடிகை ?
வேதிகா : ஸ்ரீதேவி மேடம். எனக்கு உத்வேகம் தந்தவர். சிறுவயதில் அவரை பார்த்து வளர்ந்த காரணத்தினாலே நடிகையாக விரும்பினேன். இப்போதும் என்னுடைய இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
கேள்வி : நடித்த திரைப்படங்களில் சவாலான கதாபாத்திரம்
வேதிகா : 2023, 2024ல் நான் நடித்த படங்கள் சவாலாக இருந்தன. யட்ஷினி ஓடிடி தொடர், கிராமத்தின் விடுதலைக்கு போராடும் பெண்மணியாக நடித்த ரசாக்கர், ஜாம்பவான் பிரபுதேவாவுடன் நடனமாடிய பேட்ட ராப் அல்லது திரில்லர் படமான ஃபியர் ஆகியவற்றை கூறுவேன். இவை அனைத்துமே திறமைக்கு தீனி போடும் கதாபாத்திரங்கள். கடந்த இரண்டு வருடங்களாக வித்தியாசமான கதைக்களங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது சவாலான தமிழ் படம் ஒன்றில் நடித்து வருகிறேன். சரியான நேரம் வரும் போது இதை பற்றிய அறிவிப்பு வெளியாகும்.
கேள்வி : எதிர்காலத்தில் படம் இயக்கும் வாய்ப்புள்ளதா ?
வேதிகா : படம் இயக்குவது குறித்து ஒரு போதும் நினைத்ததில்லை. எதற்கும் மாட்டேன் என்று சொல்லாத நபர் நான். நடிகையாக இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதை விருப்பத்துடன் செய்து கொண்டிருக்கிறேன்.
கேள்வி : திரையுலகில் நடிப்பை தவிர்த்து நீங்கள் விரும்பும் மற்றொரு பணி ?
வேதிகா : மிகவும் சுவாரஸ்யமான கேள்வி. எனக்கு எப்போதுமே நடிப்பு தான். வேறு எதையும் நினைத்து பார்த்ததில்லை. எனக்கு பிடித்ததை செய்யும் வாய்ப்பு கிடைத்திருப்பதை ஆசிர்வதிக்கப்பட்டதாக கருதுகிறேன். இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டி இருக்கிறது. கற்றுக்கொண்டே இருப்பேன்.
மேலும் படிங்கமணி ஹெய்ஸ்ட் மாதிரியான பான் இந்தியா படம் தயாரிக்க ஆசை - லட்சுமி மஞ்சு; ஹெர் ஜிந்தகிக்கு பிரத்யேக பேட்டி
கேள்வி : மலையாள திரையுலகில் புயலை கிளப்பிய ஹேமா கமிட்டி பற்றி ?
வேதிகா : திரையுலகில் எனக்கு அதுபோன்ற அனுபவம் ஏற்பட்டதில்லை. இது ஒரு துறையுடன் முடிந்துவிடும் விஷயமல்ல. எந்த துறையில் பாலியல் வன்கொடுமை நடந்தாலும் முதலில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்காக குரல் எழுப்ப வேண்டும். அவர்களுக்கு ஆதரவு அளித்து குற்றவாளிகள் மிது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தலாம்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation