மணி ஹெய்ஸ்ட் மாதிரியான பான் இந்தியா படம் தயாரிக்க ஆசை - லட்சுமி மஞ்சு; ஹெர் ஜிந்தகிக்கு பிரத்யேக பேட்டி

ஹெர் ஜிந்தகி தமிழ் குழுவுக்கு நடிகையும் தயாரிப்பாளருமான லட்சுமி மஞ்சு அளித்த பேட்டியில் தனக்கு ஹெய்ஸ்ட் கதைக்களம் கொண்ட பான் இந்தியா படத்தை தயாரிக்க ஆசை எனக் குறிப்பிட்டார். மேலும் தனக்கு 12 Fail மிகவும் பிடித்தமான பான் இந்தியா படம் என்று கூறினார்.
image
ஹேமா கமிட்டி குறித்து நடிகையும், தயாரிப்பாளருமான லட்சுமி மஞ்சுவிடம் முக்கியமான கேள்விகளுக்கு பதில் பெறப்பட்ட நிலையில் அடுத்ததாக பான் இந்தியா படங்கள் குறித்து சில கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு திரையுலகத்தை சேர்ந்த கலைஞராகவும், தயாரிப்பாளராகவும் அவர் பதிலளித்துள்ளார். கேள்வி - பதிலுக்கு முன்பாக பான் இந்தியா படம் என்றால் என்ன ? பெரிய நடிகர்களின் படங்கள் பான் இந்தியா என்ற வாசகத்தோடு ஏன் வெளியிடப்படுகிறது ? என்பதை தெரிந்து கொள்வோம். 2015ல் தெலுங்கு திரையுலக வெளியீடான பாகுபலிக்கு பிறகு ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் போக்கும் மாறியுள்ளது எனக் கூறலாம். இதற்கு ஓடிடியும் ஒரு காரணம். ஏனென்றால் திரையரங்களில் பார்க்க முடியாத பிற இந்திய மொழிப் படங்களை ஓடிடியில் தமிழ் டப்பிங்ல் பார்த்து ரசிக்கலாம். இதனால் படத்தின் மீதான மதிப்பும், வர்த்தகமும் இந்தியா முழுக்க பெருகுகிறது.

பான் இந்தியா படம் என்றால் என்ன ?

தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் என இந்தியாவின் பல மொழிகளில் வெளியிடப்படும் ஒரு படம் பான் இந்தியா என்ற டேக் பெறுகிறது.
பான் இந்தியா படங்கள் மொழி, பிராந்திய மற்றும் கலாச்சார தடைகளை தாண்டி, வெவ்வேறு மாநில ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்துகிறது. சுதந்திர போராட்டம், இந்து மத கோட்பாடு, புராணக் கதைகள் இந்த பான் இந்தியா டேக்கோடு வெளியாகின்றன.
இதற்கு நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கூறிய பதில் ஒன்றை பார்ப்போம். தனது பிச்சைக்காரம் தமிழில் பெற்ற வெற்றிக்கு இணையாக இன்னும் சொல்லப்போனால் தெலுங்கு பேசும் மாநிலங்களில் நல்ல லாபம் பெற்றதாக கூறினார். பிச்சைக்காரன் பான் இந்தியா படமல்ல. எனினும் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட பிச்சைக்காரன் மொழி, பிராந்திய தடைகளை தாண்டி வென்றது. இதே தான் ரிஷப் ஷெட்டியின் காந்தாராவும் நடந்தது. அப்படம் முழுக்க துளு நாடு மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தியது. தெலுங்கிலும், தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டாலும் 250 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியது.தமிழில நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் 10 மொழிகளில் தயாராகி பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது. பாகுபலி, பாகுபலி 2, கே.ஜி.எஃப் 1, கே.ஜி.எஃப் 2, சலார், தேவரா அனைத்துமே பான் இந்தியா படங்கள்.

பான் இந்தியா படங்கள் குறித்து லட்சுமி மஞ்சுவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கான பதில்களும்...

கேள்வி 1 : பான் இந்தியா படங்களால் பிராந்திய மொழி படங்கள் பாதிப்பை சந்திக்கின்றனவா ?

இந்தியாவில் பிராந்திய மொழிகளில் இருக்கும் வரை பிராந்திய மொழி படங்கள் உயிர்ப்புடன் இருக்கும். எல்லா திரைப்படங்களும் பான் இந்தியா படங்களாக அமைந்துவிடுவதில்லை. படத்தின் நடிகரை பொறுத்தே பான் இந்தியா படம் குறித்து முடிவு செய்யப்படுகிறது. இதில் நடிகரின் முந்தைய படத்தின் மதிப்பு, வர்த்தகம் அடங்கும். இந்தியா முழுவதும் மார்கெட் உள்ள நடிகரால் மட்டுமே பான் இந்தியா படங்களை கொடுக்க முடியும்.

கேள்வி 2 : படங்கள் அதிகளவில் வசூலிக்க பான் இந்தியா டேக் தேவையா ?
ஆரம்பத்தில் 100 கோடி வசூல் என வரையறை இருந்தது. தற்போது ஆயிரம் கோடி படம் என குறிப்பிடப்படுகிறது. திரையுலகின் வளர்ச்சிக்கு வெவ்வேறு டேக் லைனில் படங்கள் வெளியிடப்படுகின்றன. திரையரங்குகளுக்கு ரசிகர்களை வரவழைக்க வேண்டிய நிலை உள்ளதால் டேக் லைன் பயன்படுத்தப்படுகிறது.
கேள்வி 3 : எந்த மாதிரியான பான் இந்தியா படம் தயாரிக்க ஆசை ?
ஒரு தயாரிப்பாளராக வித்தியாசமான படங்களை தயாரித்துள்ளேன். எனக்கு ஹெய்ஸ்ட் கதைக்களத்தில் பான் இந்தியா படம் தயாரிக்க ஆசையுள்ளது. ஹெய்ஸ்ட் கதைக்களம் இந்தியா முழுவதும் எடுபடும். பிராந்திய அல்லது அழுத்தமான கதைக்களம் கொண்ட படங்களை விட ஹெய்ஸ்ட் படம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.
கேள்வி 4 : உங்களுக்கு பிடித்தமான பான் இந்தியா படம் ?
எனக்கு எல்லா விதமான படங்களும் பிடிக்கும். பிடித்தமான பான் இந்தியா படம் என்றால் 12th Fail படத்தை குறிப்பிட விரும்புகிறேன். எனக்கு அந்த படம் மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.
பிரபலங்களின் சுவாரஸ்யமான பக்கங்களை தெரிந்து கொள்ள ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP