
கோடிக்கணக்கான இதயங்களில் இசை ராஜாங்கம் நடத்திய பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகி அவர்களுக்கு இன்று 86ஆவது பிறந்தநாள். ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்த இவர் 1957ல் இசை பயணத்தை தொடங்கினார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக இவரது குரல் அருவியாய் பல கோடி பேரின் மனங்களில் நிரம்பி கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் 20,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடிய ஆயிரக்கணக்கான தமிழ் பாடல்களில் டாப் 10 பாடல்களை பட்டியலிடுவது மிகவும் சிரமமான காரியம். எனினும் உங்கள் பிளே ஸிஸ்டில் தவறாமல் இடம்பெற வேண்டிய சோலோ ஹிட்ஸ் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

1) சின்ன சின்ன வண்ணக்குயில் - மெளன ராகம், 1986
2) ஊறு சனம் தூங்கிடுச்சு - மெல்ல திறந்தது கதவு, 1986
3) கண்ணன் வந்து - ரெட்டை வால் குருவி, 1987
4) அழகு மலராட - வைதேகி காத்திருந்தாள், 1984
5) வான்மதியே - அரண்மனை கிளி, 1993
6) பொன்மேனி உருகுதே - மூன்றாம் பிறை, 1982
7) இவள் ஒரு இளங்குருவி - பிரம்மா, 1991
8) என்ன பாட சொல்லாதே - ஆண் பாவம், 1985
9) என்ன மானமுள்ள பொண்ணுயின்னு - சின்ன பசங்க நாங்க, 1992
10) மொத்து மொத்துனு மொத்தனும் - மகளிர் மட்டும், 1994
இதே படத்தில் பிரத்யேக பாடல் ஒன்றும் இருக்கிறது. தீராத விளையாட்டு படத்தில் வரும் ஜன்னல் வந்த காற்றே பாடலில் மூன்று நடிகைகளுக்கும் தனித்தனியே மூன்று பின்னணி பாடகர்களை பாட வைத்து அதை தொகுத்து அசத்தி இருப்பார் யுவன். ஆனால் 1994ல் இதை விட சிறப்பாக இசையமைத்தவர் இளையராஜா. மகளிர் மட்டும் படத்தில் வரும் கறவை மாடு பாடலில் மூன்று நடிகைகளுக்கும் எஸ். ஜானகியை மூன்று விதமாக பாட வைத்திருப்பார். ரேவதி அந்த படத்தில் மாடர்ன் பெண்ணாக நடித்திருப்பார். இதில் ரேவதி கதாபாத்திரத்திற்கு ஏற்ப ஜானகி தனது ஸ்டைலில் பாடி அசத்தி இருப்பார். ஐயர் வீட்டு பெண் கதாபாத்திரத்திற்கு ஐயர் பாஷையிலேயே பாடி இருப்பார். இறுதியாக தர லோக்கல் சென்னை பெண்ணாக ரோகிணி நடித்த கதாபாத்திரத்திற்கு அதே சென்னை தமிழில் பாடி கலக்கி இருப்பார்.
நான்கு முறை சிறந்த பாடகிக்கான தேசிய விருது, ஏழு முறை தமிழக அரசின் சிறந்த பாடகிக்கான விருது, 11 முறை கேரள அரசின் சிறந்த பாடகிக்கான விருது, பத்து முறை ஆந்திர அரசின் சிறந்த பாடகிக்கான விருது, இரண்டு முறை பிலிம்பேர் விருதுகளை வென்ற எஸ்.ஜானகி 2013ல் தனக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷன் விருதை வாங்க மறுத்துவிட்டார்.
இது குறித்து அவரது மகள் முரளி கிருஷ்ணா கூறுகையில் எனது தாய்க்கு மரியாதை மிகவும் தாமதமாக வந்துவிட்டதாகவும் வெகு காலத்திற்கு முன்பே விருது கிடைத்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com