நம்மில் சிலருக்கு குறிப்பிட்ட உணவுகள் மீது ஒவ்வாமை (அலர்ஜி) இருக்கலாம். ஹோட்டலில் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிடும்போது, இவர்கள் அந்த உணவுகளைத் தவிர்ப்பார்கள். அவர்களை வற்புறுத்தி அந்த உணவுகளை சாப்பிட வைத்தால், மறுநாள் அவர்களுக்கு தோல் அரிப்பு, வாந்தி மற்றும் பிற உடல் பிரச்சனைகள் ஏற்படலாம். இவ்வாறு உடலுக்கு கேடு விளைவிக்கும் பல உணவுகள் உள்ளன. எனவே, எந்த உணவுகள் நமக்கு அலர்ஜி ஏற்படுத்துகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த வரிசையில் நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் காணப்படும் பொதுவான ஒவ்வாமைகளைப் பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
சில உணவுகள் உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம்; சில உணவுகள் உங்களுக்கு ஒவ்வாமையாக (அலர்ஜியாக) இருக்கலாம். இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். சில உணவுகளில் உள்ள குறிப்பிட்ட புரதங்களை நம் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு தவறாக உணர்ந்து தாக்குகிறது. அதனால்தான் அந்த உணவுகள் மீது ஒவ்வாமை ஏற்படுகிறது. ஆனால், ஒரு உணவு பிடிக்கவில்லை என்பது ஒரு பொதுவான விருப்பமின்மை மட்டுமே. இது உடலுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காது. குறிப்பாக நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய உணவு ஒவ்வாமைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
கடல் உணவுகளில் ஒன்றான இறால் பலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துகிறது. இதற்குக் காரணம், இறாலில் உள்ள டிரோபோமையாசின், அர்ஜினைன் கினேஸ் மற்றும் பர்வால்புமின் போன்ற புரதங்களை நம் நோயெதிர்ப்பு அமைப்பு தவறாக எதிர்க்கிறது. கடல் உணவுகள் அலர்ஜி உள்ளவர்களுக்கு உடனடியாக தோல் சிவத்தல், அரிப்பு, சுவாசப் பிரச்சினைகள் போன்றவை ஏற்படலாம்.
முட்டை பொதுவாக குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடியது. முட்டையின் வெள்ளைக் கரு மற்றும் மஞ்சள் கரு இரண்டிலும் உள்ள புரதங்கள் சிலருக்கு பிரச்சனைகளை உண்டாக்கும். இதன் விளைவாக செரிமானக் கோளாறுகள், சுவாசப் பிரச்சனைகள், தோல் அரிப்பு போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.
வேர்க்கடலை ஒவ்வாமை மிகவும் கடுமையானதாக இருக்கலாம். சிலருக்கு இது உயிருக்கு ஆபத்தான அனாஃபைலாக்சிஸ் (கடும் ஒவ்வாமை) விளைவிக்கும். இதற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆய்வுகளின்படி, இது பரம்பரையாக வரக்கூடிய ஒவ்வாமை ஆகும். வேர்க்கடலை ஒவ்வாமை உள்ளவர்களுக்கு பாதாம், வால்நட் போன்ற கொட்டைகளும் பிரச்சினை ஏற்படுத்தும்.
கோதுமையில் உள்ள குளூட்டன் என்பது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. இது சீலியாக் நோய் (Celiac Disease) போன்ற தீவிர பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். கோதுமை ஒவ்வாமை இருப்பதாக சந்தேகம் இருந்தால், உடனடியாக அதை உணவில் இருந்து நிறுத்த வேண்டும்.
லாக்டோஸ் ஒத்துக்கொள்ளாமை (Lactose Intolerance) மற்றும் பால் ஒவ்வாமை (Milk Allergy) இரண்டும் வெவ்வேறு. லாக்டோஸ் ஒத்துக்கொள்ளாதவர்களால் பாலை செரிக்க முடியாது. ஆனால், பால் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு தோல் அரிப்பு, வீக்கம், வாந்தி போன்ற கடுமையான அறிகுறிகள் ஏற்படும். பால் ஒவ்வாமை இருந்தால், பால் மற்றும் அதன் உற்பத்திகள் (பனிர், வெண்ணெய் போன்றவை) உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
மேலும் படிக்க: சோடா குடித்தால் உடல் எடை அதிகரிக்குமா? இந்த பக்க விளைவுகளை தெரிஞ்சுக்கோங்க
கத்திரிக்காய் சைவ உணவு விரும்பிகளுக்கு மீன் போன்ற சுவையைத் தரும். ஆனால், சிலருக்கு இது ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். கத்திரிக்காயில் உள்ள சோலனைன் (Solanine) எனும் புரதம் செரிமானக் கோளாறுகள், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மற்றும் வாந்தி, மயக்கம், காய்ச்சல் போன்றவற்றை உண்டாக்கும்.
உணவு ஒவ்வாமை என்பது பொதுவான ஒரு பிரச்சனையாகும். எனவே, எந்த உணவுகள் உங்களுக்கு பிரச்சினை ஏற்படுத்துகின்றன என்பதை கவனத்தில் வைத்து, அவற்றைத் தவிர்ப்பது நல்லது. கடுமையான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.
Image source: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com