இயக்குனர் அமீரின் படைப்புகளுக்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே தனி வரவேற்பு. மெளனம் பேசியதே, ராம் போன்ற படங்கள் இன்றளவும் மக்களால் கொண்டப்ப்படுகின்றன. ஆதி பகவான் படத்திற்கு பின்பு அமீர் படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தவில்லை. அதற்கு பதில் யோகி படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதனைத்தொடர்ந்து ஒருசில படங்களில் முக்கியமான ரோலில் நடித்தார். வட சென்னை படத்திலும் நடித்தார். தற்போது அமீரின் கைவண்ணத்தில் இறைவன் மிக பெரியவன், என்ற படம் தயாராகி வருகிறது. அதே போல் நிலமெல்லாம் ரத்தம் என்ற வெப் தொடரரையும் இயக்குனர் இயக்கி வருகிறார்.
இந்நிலையில் சினிமாவுடன் சேர்த்து புதிய பிசினஸ் ஒன்றையும் அமீர் துவங்கியுள்ளார். சமீபகாலமாக பிரபலங்கள் ஹோட்டல், ரெஸ்டாரண்ட் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. நடிகை பவானி ஷங்கர் கூட அண்மையில் ஹோட்டல் தொடங்கி இருந்தார். நடிகர் சூரி ஏற்ஜெனவே ஹோட்டல் வைத்திருக்கிறார். இந்த வரிசையில் தற்போது இயக்குனர் அமீரும் இணைந்து விட்டார்.
4am coffee & Kitchen என்று பெயரி வைக்கப்பட்டுள்ள காபி ஷாபை இயக்குனர் அமீர் சென்னை ecr ஏரியாவில் புதியதாக தொடங்கியுள்ளார். . இந்த ஷாப் அதிகாலை 4 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 12 வரையும் இயங்கவுள்ளது. அதே போல் இங்கு வாடிக்கையாளர் படிப்பதற்கு நல்ல புத்தகங்களும் கொடுக்கப்படுகின்றன.
இந்த பதிவும் உதவலாம்:கலக்க போவது யாரு தீனாவின் திருமண புகைப்படங்கள்
நேற்று முன் தினம் நடைப்பெற்ற இதன் திறப்பு விழாவுக்கு இயக்குனர் வெற்றிமாறன் அவருடைய குடும்பத்தாருடன் வருகை தந்திருந்தார். அவரை தொடர்ந்து இயக்குனர் கரு.பழனியப்பன். உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஷாப்பை சூரி மற்றும் வெற்றிமாறன் ரிபன் வெட்டி துவங்கி வைத்தனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: instagram
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation