big boss season 7 update: பிக் பாஸ் சீசன் 7இல் மாயாவின் அதிகாரப் போக்கால் பாதிக்கப்படும் ஹவுஸ்மேட்ஸ்

பிக் பாஸ்  சீசன் 7  மாயாவின் தந்திரத்தால் மாட்டித் தவிக்கும் ஹவுஸ்மேட்டுகள் 

  • Shobana M
  • Editorial
  • Updated - 2023-11-08, 11:10 IST
house mates

பிக் பாஸ் வீட்டில் மாயாவின் வாய் லீலைகள் நடைபெறுகின்றன. பிக் பாஸ் வீட்டில் மாயா தான் ஒரு திறமைசாலியான போட்டியாளர் என்பதை தொடர்ந்து நிருபித்துக் கொண்டிருக்கின்றார். அவரைக் கழட்டி எறிந்து தள்ளப் பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனா மற்றும் விசித்ரா ஆகியோர் தயாராகி வருகின்றனர். இந்த வாரக் கேப்டனாக இருந்து மாயா எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்ளாமல் காலையில் பல் துலக்கப் பிரஷ் கூடக் கொடுக்க மறுத்துவிட்டார். மேலும் சுமால் பாஸ் வீட்டில் இருப்பவர்களிடம் மல்லுக்கு நின்று பேசி வருகிறார். அர்ச்சனாவும் அழுது புலம்பித் தனது பக்கம் கவனத்தை ஈர்த்து வந்தவர், இந்த முறை பிரதீப் வெளியேறியது தவறு என்று பேசி அடுத்த மக்கள் பார்வைக்கு வந்து விட்டார் என்று சொல்ல வேண்டும்.

விசித்ரா பொறுமையாக விளையாடி வருகின்றார். அவரது வயதுக்கு ஏற்ற முதிர்ச்சி அவரிடம் இருக்கின்றது. அவரையும் மாயா வெளியே தள்ளக் காய்களை நகர்த்தி வருகின்றார் அவருடன் இணைந்து அர்ச்சனாவையும் வெளியேற்றப் பூர்ணிமா, மாயா பேசிக் கொள்கின்றனர்.

விசித்ரா, மாயாவை புத்திசாலித்தனமாகச் சமாளித்து வீட்டில் இருக்கின்றார். சுமால் பாஸ் வீட்டிலிருந்து எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றார். ஜோவிகா பிரதீப் வெளியேறியபின் அமைதியாகிவிட்டார் என்று சொல்ல வேண்டும். மாயாவின் வித்தை ஜோவிகாவையும் யோசிக்க வைத்து விட்டது அதன்படி அவர் என்ன செய்வது என்று தெரியாமல் அமைதி காக்கின்றார். இவ்வளவு சிக்கல் நடந்து கொண்டிருக்கின்றது.

பிக் பாஸ் வீட்டில் யாருக்கு என்ன நடந்தாலும் அதைப் பற்றி யோசிக்காமல் நிக்சன் நடந்து கொள்ளும் விதம் சற்று அசவுகரியங்களையும் உருவாக்கி அனைவரையும் வெறுப்பு அடையச் செய்கிறது. சமூக ஊடகங்களில் அக்ஷயா, நிக்சன் பற்றிய கருத்துக்கள் பரவலாக இருந்து வருகின்றன.

பிக் பாஸ் முப்பத்தி ஆறாம் நாளைத் தொட்டுவிட்டது. இந்த நிலையில் மிகவும் வலிமையான போட்டியாளராக இருந்த பிரதீப் வெளியேறிவிட்டார். அவரைத் தந்திரமாக வெளியேற்றிய பிக்பாஸ் வீட்டினர் அவருக்குப் பின் யார் அந்த முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்று தங்களுக்குள் பேசிக் கொள்கின்றனர். மாய, பூர்ணிமா தனித்து நிற்க அவருக்கு ஒத்து ஊதி அக்ஷயா அவரைப் பின்பற்றி நிக்சனும் புத்தியின்றி நிற்கின்றனர்.

மேலும் படிக்க: பிக்பாஸ் சீசன் 7 ரேங்கிங் டாஸ்க் முதல் இடத்திற்கு முந்தும் பிரதீப்

சுமால் பாஸ் வீட்டில் ஓரளவிற்கு குரலை உயர்த்தி நடுநிலை நியாயமாகப் பேசத் தினேஷ் முயற்சிக்கின்றார். ஆனால் குழாயடி சண்டை வந்து விடுமோ என்று நிதானமாகவும் இருக்கின்றார். கானா பாலா இவரும் தேவையின்றி பேசுவதில்லை. இவர்களுடைய இந்த விளையாட்டில் அமைதி காக்கின்றார்.

பிக் பாஸ் வீட்டைச் சுத்தம் செய்ய நடந்த பட்டாசை கொக்கியால் எடுக்கும் போட்டியில் சுமால் பாஸ் வீட்டினர் அதிக நேரம் எடுத்துக் கொள்ள பிக்பாஸ் வீட்டினர் ஜெயித்து விடுகின்றனர். இதனால் மாயா மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றார். அர்ச்சனா நிதானமாக நிற்க முயற்சிக்கின்றார்.

nvr

விஷ்ணு, கானா பாலா, கூல் சுரேஷ் ஆகியோர் இவர்களுடைய வில்லங்கத்தனத்தை நன்கு உணர்ந்து அமைதி காத்து பேச வேண்டிய இடத்தில் பேசி ஒதுங்கிக் கொள்கின்றனர். ஆரம்பத்தில் விஷ்ணு கோவத்தில் கத்தி கொண்டு இருந்தார். அது தவறு என்பதை அவர் உணர்ந்திருக்கின்றார் என்று தான் சொல்ல வேண்டும்.

மாயா தனது வாய் பேச்சினால் பிக் பாஸில் பில்டப் கொடுத்த வருகின்றார். ஆனால் அவருக்கு மக்கள் ஓட்டு எப்படி இருக்கும் என்று இனி போகப் போகத்தான் தெரியும். இந்த வாரம் அக்ஷ்யாவுக்கு ஓட்டுக்கள் குறைவாக இருக்கின்றன.

பிரதீப் வெளியேறியது தவறு என்று சமூக ஊடகங்களில் பேசிக் கொள்கின்றனர். ஆனால் பிரதீப் வெளியேறியது சரி என்பது பிக்பாஸ் விதிகளின்படி நியாயமாகும். பிரதீப் விளையாடிய வேகம் சரியாக இருந்தாலும் அவர் பின்பற்றிய யுக்தி விவேகம் இல்லாத காரணத்தினால் அவர் வீழ்ந்து விட்டார் என்றே சொல்லலாம். பிக் பாஸில் ஜெயிக்க வேண்டும் என்ற நம்பிக்கை இருக்கலாம் ஆனால் அவருடைய ஓவர் கான்பிடன்ஸ் அவரை நிறுத்தியது என்றே சொல்ல வேண்டும்.

மேலும் படிக்க: பிக்பாஸ் சீசன் 7 டாஸ்க்குகளில் கலக்கும் பிரபல போட்டியாளர்கள்

பிரதீப் என்ற பெரிய போட்டியாளரைத் தள்ளியபின்பு முதலாம் இடத்திற்கு தான் மட்டும் தான் தகுதியானவர் என்று மாயையில் மாயா இருக்கலாம். ஆனால் இன்னும் ஒரு வாரத்தில் மாயாவிற்கும் ரெட் கார்டு வந்தாலும் வரும் என்று நம்பப்படுகின்றது. அந்த அளவிற்கு மாயா தனது அதிகாரத்தை வரம்பு மீறிப் பயன்படுத்துவது பேச்சில் ஒரு தெளிவின்றி காயப்படுத்துவது என அரக்கத் தனமாக இருக்கின்றார்.

இதற்குப் பின் யாரெல்லாம் வெளியேறுவார்கள் என்று ஒருவருக்கொருவர் முன்னமே முடிவு செய்து விளையாடுகின்றனர். இப்படியாகப் பிக்பாஸ் சீசன் 7 நகர்கின்றது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP