பாஸ் சீசன் 7 அர்ச்சனாவால் அர்ச்சனா சுமால் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய விசித்திரா. பிக்பாஸ் சீசன் 7 வைல்டு கார்டு எண்ட்ரிகள் செய்த ஐந்து பேர் பிக்பாஸ் வீட்டிற்கு உள்ளே போனதும் அங்குத் தினசரி டாஸ்க் நடக்கிறதோ இல்லையோ ஒருவருக்கொருவர் பஞ்சாயத்து நடக்கின்றது. இந்த முறை அர்ச்சனா டார்கெட் செய்திருப்பது விசித்திராவை.
விசித்திரா இந்த விளையாட்டுக்குத் தகுந்த பிளேயர் என்று சொல்லலாம் அவரது வயதுக்கு ஏற்ற முதிர்ச்சி மற்றும் கற்றல் அறிவு நிறைந்த பெண்ணாகவும் வீட்டினருக்கு தேவையானவற்றை செய்து தருவதில் வல்லவராகவும் இருக்கின்றார். அவரது பேச்சுக்கள் வீட்டில் இருக்கும் நமது பெரியோர்கள் பேச்சைப் போலவே ஒத்திருக்கின்றது என்று சொல்லலாம். பிக்பாஸிடம் மன்னிப்பு கேட்ட விதம் மிகவும் அருமை.
பிக்பாஸ் சீசன் 7 மிகச் சிறப்பாகப் போய்க்கொண்டிருக்கின்றது. மார்னிங் டாஸ்கில் வீட்டில் இருப்பவர்கள் ஒரு பஞ்ச் டயலாக் சொல்லி யாருக்கு அது பொருந்தும் என்பதை அவரவரது கணிப்புப் படி சொல்ல வேண்டும். பிக்பாஸ் போட்டியாளர்கள் ஆளுக்கு ஒரு பஞ்ச் டயலாக்குகள் அள்ளி வீசி ஒருவருக்கொருவர் பெயரைச் சொல்லிக் கொள்கின்றனர். பிரதீப் ஜோவிகாவையும், ஜோவிகா, பிரதீப்புக்கு பஞ்ச் டயலாக் பேசுகின்றனர். இதுபோல் ஒவ்வொருவரும் ஒருவருக்கு ஏற்றார் போலப் பஞ்ச் டயலாக் பேசிக் கொள்கின்றனர்.
மேலும் படிக்க: பிக்பாஸ் சீசன் 7 ரேங்கிங் டாஸ்க் முதல் இடத்திற்கு முந்தும் பிரதீப்
வீட்டில் இருப்பவர்கள் அவரவர் டாஸ்குகளை சரியாகச் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த வாரம் கேப்டன் பொறுப்புக்குப் பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ் நாமினேஷன் செய்ய வேண்டும். பிக்பாஸ் வீட்டிலிருந்து மாயா மற்றும் கூல் சுரேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும் சுமால் பாஸ் வீட்டிலிருந்து விசித்திரா பங்கேற்றார்.
ஒத்த காலைத் தூக்கிக்கொண்டு அதிக நேரம் இருப்பவர்கள் வென்றவர்களாவார்கள். விசித்ரா இந்தப் போட்டியில் ஜெயிக்கவில்லை இதனை அடுத்து மாயா, சுரேஷ் இடையே நடைபெற்றது. இந்த வாரம் கூல் சுரேஷ் தனது கேப்டன்சி பொறுப்பை வெற்றிகரமாகச் செய்தார் என்று சொல்ல வேண்டும். விசித்ரா கோவமாக மன அழுத்தம் காரணமாக வெளியேறிப் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து அமர்ந்து கொண்ட போதும் அவரைச் சமாதானப்படுத்தி நிதானமாகச் சுமால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். சமையல் செய்வதை சிறப்பாகச் செய்தார்.
இந்த வாரம் யுகேந்திரன் இல்லாதது ஒரு இழப்பாகவே தெரிந்தது. ஜோவிகாவிற்கு பெரும் இழப்பாகத்தான் இருந்தது என்று சொல்லலாம்.
பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் அக்ஷயாவை ஜெயிலுக்கு அனுப்புகின்றனர். கொடுக்கப்பட்ட டாஸ்கை பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் ஜெயிக்காத காரணத்தினால் அக்ஷயா ஜெயிலுக்கு செல்கின்றார். மேலும் இந்த வாரம் எலிமினேஷன் ரவுண்டுக்கு அக்ஷயா தள்ளப்படுவார் என்று தோன்றுகிறது.
நிக்சன் தான் எதற்காகப் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தோம் என்பதை மறந்து செயல்படுகின்றார் என்று தோன்றுகிறது. இவரது ரேப் பாடல் இந்த வாரம் தான் டேலண்ட் ஷோ மூலமாக வெளிவந்தது என்று சொல்லலாம்.
பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தனித்தனியாகத் தங்களது திறமைகளைச் சிறப்பாக ஒன்று கூடி வெளிப்படுத்தினர்.
இந்த வாரம் அதிகமான கடுப்பேற்றல் வெறுப்புகளை அர்ச்சனா சம்பாதித்தார் என்று சொல்ல வேண்டும். மேலும் தினேஷ் பேச வேண்டிய இடத்தில் பேசித் தனது பணியைக் கச்சிதமாகச் செய்கின்றார்.
ஜோவிகாவும் பிக்பாஸ் வீட்டில் விசித்திராவுடன் பாசப்பிணைப்பில் இணைந்து செயல்படுகின்றார். மேலும் மாயா, பூர்ணிமா இருவருடைய நட்பு நெருக்கமாகி அதிகரித்து காணப்படுகின்றது. எதற்கெடுத்தாலும் தன் பக்கம் நியாயம் இருப்பது போல் காட்டிக் கொண்டு அழுவது வாடிக்கையாகக் கொண்டிருக்கின்ற வைல்டு கார்டு போட்டியாளராக அர்ச்சனா செயல்படுகின்றார்.
மேலும் கானா பாலா தனது பாட்டினால் வீட்டில் மகிழ்ச்சி இருக்க செய்கின்றார். அவருக்கு மக்களைச் சமாளிப்பது ஒரு எளிதான காரியமாகத் தான் இருக்கும் என்று தோன்றுகிறது.
மேலும் படிக்க: பிக்பாஸ் சீசன் 7 மிரள வைக்கும் வைல்டு கார்டு எண்ட்ரிகள் மிரட்டும் வீட்டினர்
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டுக்கு வைல்டு கார்டு போட்டியாளராக வந்த அன்ன பாரதி மற்றும் ரேடியோ ஜாக்கி இருவரும் அதிக அளவில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation