நடிகை ஆண்ட்ரியா பாடகியாக அந்நியன் படத்தில் இடம்பெற்ற ‘கண்ணும் கண்ணும் நோக்கியா’ என்ற படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பல ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார்.கோவா படத்தில் இடம்பெற்ற ‘இதுவரை’ என்ற பாடல் இளைஞர்கள் ஃபேவரெட் பாடலாக மாறியது. மதராசபட்டினம் படத்தில் ‘பூக்கள் பூக்கும் தருணம்’ என்ற பாடலையும் பாடி தனது குரலால் வளத்தால் ரசிகர்களை கட்டிப்போட்டுவிட்டார்.அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஓ சொல்றியா’ பாடலை பாடினார்.இந்த பாடல் உலகம் முழுவதும் ட்ரெண்டானது.
ஆண்ட்ரியா பாடகி மட்டுமில்லாமல் சிறந்த நடிகை என்ற பெயரையும் பெற்றுள்ளார். 2007 ஆம் ஆண்டு வெளியான ’பச்சைக்கிளி முத்துச்சரம்’படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம் ஆகிய படங்களில் நடித்தார். தனுஷ் நடிப்பில் வெளியான வடச்சென்னை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது நடிகை ஆண்ட்ரியா ‘பிசாசு 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் நீண்ட நாட்களாக திரையரங்குகளில் வெளியாகாமல் தேதி ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மூன்று படங்களில் நடித்து முடித்துள்ளார்.
நடிகை ஆண்ட்ரியா அடிக்கடி வெக்கேஷனிற்கு சென்று புகைப்படங்களை பகிர்வார். இந்நிலையில் இலங்கையில் உள்ள நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு சென்று வழிப்பட்டுள்ளார். அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். பக்தியில் திளைக்கும் ஆண்ட்ரியாவின் புகைப்படம் லைக்ஸை குவித்து வருகிறது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com