ராகு - கேது பரிகாரம் செய்வதற்கு செல்ல வேண்டிய முக்கியமான 4 கோயில்கள்

ஒருவரின் ஜாதகத்தில் அமையும் கட்டங்கள் பொறுத்து குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி சொல்லப்படுகின்றன. ஜாதகத்தின்படி ராகு - கேது பரிகாரம் செய்ய வேண்டும் என ஜோதிடர்கள் அறிவுருத்தினால் அதற்கு எந்தெந்த கோயில்களுக்கு சென்று வழிபட வேண்டும் என்பதை இங்கே பார்ப்போம்.
image

ராகு - கேது தோஷம் இருந்தால் ஒரு நபரின் வாழ்க்கையில் எதிர்மறை தாக்கம் இருந்து கொண்டே இருக்கும். எந்த காரியத்தை செய்ய நினைத்தாலும் அதில் தடை ஏற்பட்டு கொண்டே இருக்கும். தொழில், திருமண விஷயம், ஆரோக்கியம் ஆகியவற்றில் ராகு கேது தோஷத்தின் தாக்கம் இருக்கும். ராகு - கேது தோஷம் இருந்தால் காளஹஸ்தி செல்ல ஜோதிடர்கள் அறிவுறுத்துவார்கள். அதை தவிர்த்து வேறு சில கோயில்கள் தமிழ் நாட்டிலும் உள்ளன. ராகு - கேது தோஷம் நீங்க செல்ல வேண்டிய நான்கு முக்கிய கோயில்களின் விவரத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

காளஹஸ்தி, ஆந்திரா

இந்த கோயிலில் காளத்திநாதரின் உருவில் ராகுவும் ஞான பிரசசூணதேவியின் உடலில் கேதுவும் அமைந்துள்ளது. அதனால் ராகு - கேது பரிகாரம் செய்ய மக்கள் பலரும் செல்லும் இடமாக காளஹஸ்தி விளங்குகிறது. திருமண தடைகள், தொழில் தடைகள் நீங்க இங்கு சென்று பூஜை செய்வது நல்லது. மற்றொரு சிறப்பு என்னவென்றால் இந்த கோயிலின் அமைப்பு ராகு - கேது ராசி மண்டலத்தில் அப்பிரதட்சணமாக இயங்குவது போல இருக்கும். ராகு கேது தோஷங்கள் நீங்க இங்கு தினந்தோறும் பூஜை செய்யப்படுகிறது.

திருக்களாச்சேரி

நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள திருக்களாச்சேரி ராகு கேது பரிகாரம் செய்ய ஏற்ற வழிபாட்டு தலமாக விளங்குகிறது. ராகு - கேது தோஷம் உள்ளவர்கள் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என நம்பப்படுகிறது.

ஸ்ரீசக்தி விநாயகர் கோயில்

திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள ஸ்ரீசக்தி விநாயகர் கோயில் ராகு - கேது பரிகாரத்திற்கு பெயர் பெற்றது. குறிப்பாக வெள்ளிகிழமைகளில் இங்கு உள்ள விநாயகரை வழிபட்டால் ராகு - கேதுவால் ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்.

திருமுருகன்பூண்டி

திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் திருமுருகன்பூண்டி ராகு - கேது பரிகாரத்திற்கு சிறந்த தலமாக விளங்குகிறது. இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு கேது தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

ராகு கேது தோஷம் நீங்க பரிகாரங்கள்

ராகு - கேது தோஷம் நீங்க நாகலிங்கப் பூ, வில்வம் மற்றும் வன்னி இலை ஆகியவற்றை கொடுத்து மரத்தில் மஞ்சள் கயிறு கட்டி மனதார இறைவனிடம் வேண்டும். அதே போல் கோயிலில் இருக்கும் தீர்த்தக்கரையில் மூழ்கி எழுந்திடவும்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP