anand ambani weightloss

Anant Ambani Diet : ஆனந்த் அம்பானியின் டயட்.. 108 கிலோ எடையை எப்படி குறைத்தார்?

அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் டயட் பிளான் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம். 18 மாதத்தில் 108கிலோ எடையை எப்படி குறைத்தார் தெரியுமா?
Editorial
Updated:- 2023-04-27, 13:34 IST

அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானியின் தொழில் வளர்ச்சி குறித்து அனைவருக்கும் தெரியும். தனது தந்தைக்கு உறுதுணையாக பிசினஸில் உதவி செய்து வருகிறார். அம்பானி குரூப்ஸின் வளர்ச்சிக்காக ஆனந்த் அம்பானி எடுத்த முக்கிய முடிவுகள், நிதி ஆலோசனைகள் கம்பெனியின் வளர்ச்சி மற்றும் லாபத்திற்கு முக்கிய காரணமாகின. பிசினஸில் அனைவரையும் மிரள வைத்தது போலவே கடந்த 2018 ஆம் ஆண்டு 108 கிலோ எடையை வெறும் 18 மாதத்தில் குறைத்து அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார் ஆனந்த் அம்பானி.

இது எப்படி சாத்தியம்? என அனைவரும் ஆச்சரியப்பட்டனர். அதே சமயம் ஆனந்த் அம்பானியின் முழு முயற்சியையும் பலரும் பாராட்டி தள்ளினர். முறையான உடற்பயிற்சி, டயட் மூலம் இயற்கையான முறையில் ஆனந்த் அம்பானி உடல் எடையை குறைத்தார் என அவரின் ட்ரெயினரும் கூறி இருந்தார். 18 மாதத்தில் 108கிலோ எடையை குறைக்க ஆனந்த் அம்பானி பின்பற்றிய டயட் குறித்து தான் இந்த பதிவில் பார்க்க பொகிறோம்.

ambani family

இந்த பதிவும் உதவலாம்:நீதா அம்பானி குடிக்கும் டீயின் விலை இத்தனை லட்சமா!

ஆனந்த் அம்பானி டயட் மற்றும் உடற்பயிற்சி

ஒரு நாளைக்கு குறைந்தது 21 கி.மீ வரை ஆனந்த் அம்பானி நடைப்பயிற்சி செய்வாராம். அதன் பின்பு யோகா. இதற்கிடையில் எடை தூக்கும் பயிற்சியையும் ட்ரெயினர் உதவியுடன் செய்து வந்துள்ளார். வினோத் சன்னால் என்பவர் ஆனந்த் அம்பானியின் ட்ரெயினரக 18 மாதங்கள் கூடவே இருந்துள்ளார். சர்க்கரை சேர்க்காத உணவு, குறைந்த கலோரிகள், குறைந்த கார்பன் கொண்ட உணவு, பத்திய சாப்பாடு என கடுமையான தவம் போல் இருந்து உடலை குறைத்து இருக்கிறார்.

anand ambani marriage

உடல் பிரச்சனை

இவ்வளவு கஷ்டப்பட்டு உடல் எடையை 18 மாதத்தில் குறைத்த பின்பு கடந்த 2020 ஆம் ஆண்டு ஆனந்த் அம்பானிக்கு ஆஸ்துமா பிரச்சனை இருப்பது உறுதியானது அதற்காக மருந்து, மாத்திரை சிகிச்சை என சென்றவருக்கு உடல் எடை அதிகரிக்க தொடங்கியது. உடற்பயிற்சியும் செய்ய முடியாது என்பதால் உடல் எடையை அதிகரிக்க தொடங்கியது. அதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆனந்த் அம்பானி வழக்கத்தை விடவும் பயங்கர குண்டாக இருக்கிறார். ஆனாலும் அவர் மீது ராதிகா கொண்ட காதல், திருமணம் வரை சென்றது. உருவ கேலிகளை பொருட்படுத்தாமல் இருவரும் திருமணத்திற்கு தயாராகி வருகின்றனர்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: google, shutterstock

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com