
கடந்த 20 வருடமாக தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வருகிறார் நடிகை த்ரிஷா. ஜோடி படத்தில் துணை கதாபாத்திரமாக தோன்றியவர் பின்பு சூர்யா நடித்த மெளம் பேசியதே படத்தில் லீட் ரோலில் நடித்தார். ஆனால் அந்த படத்தில் கடைசியாக சூர்யாவுக்கு ஜோடி நடிகை லைலா தான் என்றாலும், த்ரிஷாவின் ரோல் பெரிதும் ஈர்க்கப்பட்டது. அடுத்தடுத்த படங்களில் கமிட்டானார். கடைசியாக 2019 ஆம் ஆண்டு வெளியான பேட்ட படத்தில் ரஜினிகாந்த் உடன் நடித்திருந்த த்ரிஷாவுக்கு 2022 ஆம் ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் 2 பெரும் புகழை வாங்கி தந்துள்ளது.
தமிழ்நாட்டின் செல்ல குந்தவையாக வலம் வருகிறார். நயன், சமந்தாவை ஓரங்கட்டி மீண்டும் முதல் இடத்தை பிடித்து விட்டார். த்ரிஷாவின் ஆடை தேர்வு என்பது மிகவும் கவனிக்க கூடியது. பொன்னியின் செல்வன் புரமோஷன் விழாக்களில் த்ரிஷா அணிந்திருந்த ஆடைகள் தனியாக கவனம் ஈர்த்தன. அதிலும் பார்ட்டி ட்ரெஸில் அதிக கவனம் செலுத்தக்கூடியவர் த்ரிஷா. வித்தியாசமான மாடல்களை மார்க்கெட்டில் அறிமுகம் செய்து வைப்பார். அந்த வகையில் இந்த பதிவில் த்ரிஷாவின் பார்ட்டி லுக் ட்ரெஸ்கள் பற்றி பார்ப்போம்.
கழுத்துக்கு அருகில் எம்பிராய்டரி மற்றும் பிளவு கட் உள்ள அழகான வெள்ளை கவுனை ஒருமுறை ஹைதராபாத் விழா ஒன்றுக்கு அணிந்து வந்திருந்தார் த்ரிஷா.

ஃபிரில் ஸ்லீவ்ஸ் மற்றும் வி-நெக்லைன் கொண்ட சிஸ்லிங் வெல்வெட் ஆடையை ராங்கி படத்தின் புரமோஷனில் அணிந்திருந்தார் த்ரிஷா.

ஆலிவ் ஜம்ப்சூட் கோல்டன் பெல்ட், வி-நெக்லைன் மற்றும் கட் ஸ்லீவ்களுடன் த்ரிஷா அணிந்திருந்த ஜம்ப்சூட் அவருக்கு கவர்ச்சியான தோற்றத்தை தந்தது.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: instagram
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com