Actress Samantha : பிங்க் கலர் புடவையில் அசர வைத்த சமந்தா! ட்ரெண்டிங் போட்டோஸ் இதோ..

நடிகை சமந்தா பிங்க் கலர் புடவையில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

 
samantha in pink saree

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கடந்த ஆண்டு சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். உடல்நிலை கொஞ்சம் தேறிய நிலையில் தான் விஜய் தேவரக்கொண்டா நடிப்பில் குஷி படத்திலும், சிட்டாடல் வெப் தொடரிலும் நடித்தார். குஷி திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. குஷி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கிறது.

இதற்கு பிறகு சமந்தா எந்த படங்களிலும் நடிக்கபோவதில்லையாம். உடல்நலனை கருத்திக்கொண்டு ஒரு வருடம் சினிமாவிலிருந்து ஓய்வு எடுக்க உள்ளாராம். சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு செல்ல உள்ளதாக கூறப்படுக்கிறது. சிகிச்சையின் போது நன்றாக ஓய்வெடுக்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் நடிகை சமந்தா பிங்க் கலர் புடவையில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். துபாயில் நிஷாகா ஜுவல்லரியின் திறப்பு விழாவில் கலந்துக்கொள்ள சமந்தா சென்றுள்ளார். இந்த விழாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ட்ரெண்டாகி வருகிறது.

samantha in modern saree

இதில் பிங்க் கலர் புடவை கட்டியிருக்கும் சமந்தா புடவைக்கு மேலே அதே நிறத்தில் கோட்டும் அணிந்துள்ளார். சமந்தாவின் இந்த உடையை பிரபல ஆடை வடிவமைப்பாளர் ப்ரீத்தம் ஜுகல்கர் வடிவமைத்து இருக்கிறார். உடைக்கு ஏற்றமாதிரி மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல் செய்திருக்கிறார்.சமந்தாவின் இந்த அழகான புகைப்படங்கள் இணையத்தில் லைக்ஸை குவித்து வருகிறது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP