herzindagi
image

வெறும் 5 நிமிடங்கள் போதும்; முகத்தைப் பளபளப்பாக்கும் மசூர் பருப்பு பேஸ் பேக் ரெடி பண்ணிடலாம்!

மசூர் பருப்பில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் சருமத்தை எப்போதும் பிரகாசமாக வைத்திருக்க உதவுகிறது.
Editorial
Updated:- 2025-10-21, 23:22 IST

பெண்கள் எப்போதுமே தங்களுடைய முகத்தை பொலிவுடன் வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு. பணிக்குச் செல்லும் பெண்களாக இருந்தால் எப்பொழுதாவது நேரம் கிடைக்கும் போது அழகு நிலையங்களுக்குச் சென்று தங்களை அழகாக்கிக் கொள்வார்கள். அதுவே வீட்டில் இருக்கும் பெண்களில் சிலர் எதுக்கு வீண் செலவு என நினைத்து அழகு நிலையங்களுக்கு எல்லாம் செல்லமாட்டார்கள். ஆனாலும் சில பெண்களைப் பார்க்கும் போது அவர்களைப் போன்றிருந்தால் நல்லா இருக்கும்ல என்ற ஏக்கம் அதிகளவில் இருக்கும்.

இப்படி பட்ஜெட்டில் குடும்பம் நடத்தும் பெண்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் மசூர் பருப்பைக் கொண்டு வீட்டிலேயே தயார் செய்யும் பேஸ் பேக்கை உபயோகித்துப் பார்க்கவும். இதில் முல்தானி மிட்டி, மஞ்சள், பால் போனறவை சேர்க்கப்படுவதால் முகத்தை எப்போதும் பொலிவுடன் வைத்திருக்க உதவுகிறது. ஆம் மசூர் பருப்பு முகத்தைப் பொலிவாக்க உதவுகிறது. முல்தானி மட்டி சேர்க்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் தன்மையை நீக்கவும், மஞ்சள் முகப்பருக்களைப் போக்கவும், பச்சைப் பால் சேர்க்கும் போது சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகிறது.

மேலும் படிக்க: மழைக்காலம் வந்தாச்சு... சருமம் பாதிப்படையாமல் இருக்க இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!


மசூர் பருப்பு பேஸ் பேக்

  • மசூர் பருப்பு - 100 கிராம்
  • முல்தானி மட்டி - 50 கிராம்
  • மஞ்சள்- 50 கிராம்
  • பச்சை பால் - சிறிதளவு

 மேலும் படிக்க: கருவளையங்களை போக்க சிம்பிள் தீர்வு; இந்த எளிய வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றலாம்

  • முதலில் மசூர் பருப்பை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • இதை ஒரு பவுல் அல்லது பிளேட்டில் மாற்றிக் கொள்ளவும். இதனுடன் 50 கிராம் அளவிற்கு முல்தானி மட்டி, 50 கிராம் மஞ்சள் மற்றும் இவற்றைக் கலக்குவதற்குப் போதுமான அளவு பால் போன்றவற்றைச் சேர்த்துக் கொண்டால் போதும். முகத்தை எப்போதும் பளபளப்பாகவும்,பொலிவுடன் வைத்திருக்கும் முல்தானி மட்டி ரெடி.

மேலும் படிக்க: கண்ணாடி போன்ற பளபளப்பான சருமத்தை பெற பீட்ரூட் ஐஸ் கட்டிகளை இப்படி பயன்படுத்தவும்

இதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி சுமார் 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும். பின்னர் குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தைக் கழுவினால் போதும். பேஸ் பேக்கிற்காக சேர்த்துள்ள அனைத்துப் பொருட்களிலும் முகத்தை எப்போதும் பிரகாசமாக வைத்திருக்கும் ஊட்டச்சத்துக்கள் உள்ளது. எனவே இனி முகத்தை பளபளப்பாக வைத்திருக்க வேண்டும் என்றால் விலையுயர்ந்த அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துவதை நிறுத்திவிடுங்கள். பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு மசூர் பருப்பைக் கொண்டு பேஸ் பேக் ரெடி பண்ணுங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com