பல பெண்களுக்கும் இந்த குதிகால் வெடிப்பு ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. இதை குணப்படுத்த பார்லருக்கு சென்று பெடிக்யூர் போன்ற சிகிச்சைகள் செய்தாலும் இந்த வெடிப்பு திரும்ப வந்து விடும். வறட்சி, ஈரப்பதம் இல்லாதது, அதிக நேரம் நின்று வேலை செய்வது அல்லது ஊட்டச்சத்து குறைபாடுகள் ஆகியவற்றால் ஏற்படும் ஒரு நிலை இந்த குதிகால் வெடிப்பு. அவை அதிக வலியாகவும் அசிங்கமாகவும் இருந்தாலும், விலையுயர்ந்த சிகிச்சைகள் இல்லாமல் மென்மையான கால்களை மீட்டெடுக்க பல இயற்கை வைத்தியங்கள் உதவும். அந்த வரிசையில் பாதங்களில் ஏற்படும் குதிகால் வெடிப்பை இயற்கையாக குணப்படுத்த சில பயனுள்ள வீட்டு வைத்தியங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
தேங்காய் எண்ணெய் ஆழமாக ஈரப்பதமூட்ட உதவுகிறது, அதே நேரத்தில் தேன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது.
2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து கொள்ளுங்கள். இப்போது இந்த கலவையை உங்கள் குதிகால் மீது தடவி 10 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யுங்கள். இதற்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். சிறந்த முடிவுகளுக்கு தினமும் இரவில் இதை செய்யவும்.
வாழைப்பழங்களில் இயற்கை எண்ணெய்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன, அவை கரடுமுரடான சருமத்தை கூட மென்மையாக்க உதவுகின்றது.
ஒரு பழுத்த வாழைப்பழத்தை மென்மையான பேஸ்ட்டாக அரைக்கவும். இதை உங்கள் குதிகால் மீது தடவி, 15 20 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். இதற்கு பிறகு தண்ணீரில் கழுவி தேங்காய் எண்ணெய் தடவி ஈரப்பதமூட்டவும்.
அரிசி மாவு சருமத்திற்கு இயற்கையான எக்ஸ்ஃபோலியன்ட்டாக செயல்படுகிறது, அதே நேரத்தில் ஆப்பிள் சைடர் வினிகர் இறந்த சருமத்தை அகற்ற உதவுகிறது.
2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் சில துளிகள் தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். இதை உங்கள் குதிகால்களை வட்ட இயக்கங்களில் தேய்த்து, பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி ஈரப்படுத்துங்கள்.
எலுமிச்சையின் அமிலத்தன்மை கடினமான சருமத்தை மென்மையாக்க உதவுகிறது மற்றும் குதிகால் வெடிப்புகளை குணப்படுத்தி பாதங்களை ஒளிரச் செய்கிறது.
எலுமிச்சை சாறுடன் கலந்த வெதுவெதுப்பான நீரில் உங்கள் கால்களை 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். இதனை தொடர்ந்து ஒரு பியூமிஸ் கல்லால் மெதுவாக தேய்த்து, பின்னர் கால்களுக்கு மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள்.\
மேலும் படிக்க: சரும பராமரிப்பில் புரோபயாடிக்ஸ் சேர்க்கலாமா? சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
எப்போதும் நீரேற்றமாக இருங்கள். உங்கள் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க நிறைய தண்ணீர் குடிக்கவும். அதே போல வசதியான காலணிகளை அணியுங்கள், உராய்வை அதிகரிக்கும் காலணிகளைத் தவிர்க்கவும். உங்கள் கால்களில் இறந்த சருமத்தை அகற்ற வாரத்திற்கு ஒரு முறை பியூமிஸ் கல்லைப் பயன்படுத்துங்கள். மேலும் தினமும் குளித்த பிறகு கால் கிரீம் அல்லது இயற்கை எண்ணெய்களைப் பாதத்தில் பயன்படுத்துங்கள்.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com