
பெண்கள் தங்களது முகத்தை எப்போதும் பொலிவுடனும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதிலும் ஏதேனும் விசேஷ தினங்கள் என்றால் அழகு நிலையங்களுக்குச் செல்வது முதல் வீட்டிலேயே சில அழகுச் சாதன பொருட்களைப் பயன்படுத்தி தங்களை அழகாக்கிக் கொள்ள முயற்சி செய்வார்கள். சில நேரங்களில் இதற்கு அதிக செலவாகும் என்பதால் இதற்கு மாறுதலாக என்ன செய்யலாம்? என்ற தேடல் அதிகளவில் இருக்கும். சோசியல் மீடியாக்களிலும் சருமத்தைப் பொலிவாக்க என்ன செய்யலாம் என அதிகளவில் தேடி பார்க்கின்றனர். இந்த மனநிலையில் நீங்களும் இருக்கிறீர்களா? அப்படியென்றால் அதிக செலவு மற்றும் எவ்வித பக்க விளைவுகள் இல்லாமல் சருமத்தைப் பொலிவாக்க செம்பருத்தியைப் பயன்படுத்திப் பாருங்கள். எப்படி என்பது குறித்த தகவல்கள் இங்கே.
நம்முடைய அனைவரது வீடுகளிலும் எளிதில் கிடைக்கும் பூக்களில் ஒன்றாக உள்ள செம்பருத்தி. இதைத் தினமும் சாப்பிடும் போது இதயம் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதோடு, பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள முடியும் என்பது அனைவரும் அறிந்ததே. இதோடு மட்டுமின்றி முகத்தை அழகாக பராமரிக்கவும் செம்பருத்தி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த பூக்களைக் கொண்டு பேஸ் பேக் தயாரித்து உபயோகிக்கவும்.
மேலும் படிக்க: கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் 5 அற்புத உணவுகள்; முடி உதிர்வு பிரச்சனைக்கு எளிய தீர்வு
முகத்தை எப்போதும் பொலிவுடன் வைத்திருக்க செம்பருத்தி பேஸ் பேக்குகளைத் தயாரித்து உபயோகிக்கலாம். இதற்கு முதலில் செம்பருத்தி இலை மற்றும் பூக்களை நிழலில் காய வைக்கவும். பின்னர் இதை பொடியாக்கிக் கொள்ளவும். இதனுடன் 1 டீஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் தயிர் போன்றவற்றைச் சேர்த்து பேஸ் பேக் தயாரித்துக் கொள்ளவும்.
இதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும். பின்னர் குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தைக் கழுவினால் போதும் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இயற்கையான முறையில் சருமத்தைப் பொலிவாக்க உதவும்.
மேலும் படிக்க: Winter Face Pack: குளிர்காலத்தில் மங்கிப் போன சருமத்தை பொலிவாக மாற்ற உதவும் 5 ஹோம்மேட் ஃபேஸ்பேக்
செம்பருத்தியை பேஸ் பேக்காக மட்டுமின்றி ஸ்கரப் போன்று பயன்படுத்தலாம். ஒரு சிறிய பவுலில் செம்பருத்தி பூவின் பொடி, சிறிதளவு சர்க்கரை, கடலை மாவு மற்றும் பால் சேர்த்து ஸ்கரப் தயார் செய்துக் கொள்ளவும். வழக்கம் போன்று பயன்படுத்தும் ஸ்கரப் போன்று முகத்தில் மென்மையாக தேய்த்து எடுத்தால் போதும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.

செம்பருத்தியில் உள்ள வைட்டமின் சி, ஏஎச்ஏ போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் சருமத்தில் உள்ள சுருக்கங்களைக் குறைத்து முகத்தை எப்போதும் பிரகாசமாக வைத்திருக்க உதவுகிறது. இயற்கையான அஸ்ட்ரிஜென்ட் மற்றும் பாக்டீரிய எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் உள்ள எண்ணெய் பிசுபிசுப்பைக் கட்டுப்படுத்தவும், முகத்தில் உள்ள முகப்பருக்கள் மற்றும் வெடிப்புகளை சரி செய்து சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகிறது.
Imafe source - Freep
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com