
Hair Care Tips: குளிர்காலம் என்றால் சருமம் வறட்சியாகும் என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், நம்முடைய கூந்தலும் இந்த பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படுகிறது. காற்றில் ஈரப்பதம் குறைவது, குளிர்ந்த காற்று மற்றும் வெந்நீரில் தலைக்கு குளிப்பது போன்ற காரணங்களால், முடி தனது இயற்கையான எண்ணெய் பசையை இழக்கிறது. இதனால் முடியில் வறட்சி, பொடுகு தொல்லை மற்றும் அதீத முடி உதிர்வு ஏற்படுகிறது. இந்தக் காலக்கட்டத்தில் கூந்தலுக்கு தேவையான கூடுதல் ஊட்டச்சத்தை அளிக்க இயற்கை எண்ணெய்கள் மிக அவசியம் ஆகும்.
அந்த வகையில், காலங்காலமாக நம் முன்னோர்கள் கூந்தல் பராமரிப்பிற்கு பயன்படுத்தி வரும் ஒரு அற்புத மூலிகை தான் செம்பருத்தி. செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகளில் கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. குளிர்காலத்தில் செம்பருத்தி எண்ணெயை எப்படி தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது என இதில் விரிவாக காண்போம்.
கடைகளில் கிடைக்கும் கலப்படமான எண்ணெயை விட, வீட்டிலேயே சுத்தமாக தயாரிக்கும் செம்பருத்தி எண்ணெய் கூந்தலுக்கு இரட்டிப்பு பலனை தரும்.
மேலும் படிக்க: Winter Hair Oils: குளிர்காலத்தில் உங்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் 6 எண்ணெய்கள்
செம்பருத்தி எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு நன்மைகள் நம்முடைய கூந்தலுக்கு கிடைக்கின்றன. அவற்றில் சில முக்கியமான அம்சங்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
மேலும் படிக்க: Dandruff Control Tips: குளிர்காலத்தில் அதிகரிக்கும் பொடுகு தொல்லையை கட்டுப்படுத்த உதவும் வீட்டு வைத்திய முறைகள்
செம்பருத்தி பூவில் இயற்கையாகவே அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை முடிக்கு தேவையான கெரட்டின் (Keratin) என்ற புரதத்தை உற்பத்தி செய்ய உதவுகின்றன. இது முடியை வேரிலிருந்து உறுதியாக்குவதோடு, முடி உதிர்வதை தடுத்து அடர்த்தியாக வளர உதவுகிறது.

முடி உதிர்ந்த இடங்களில் மீண்டும் முடி வளர்வதை தூண்டும் தன்மை இதற்கு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, முடி உதிர்வின் ஆரம்ப கட்டத்தில் இருப்பவர்களுக்கு, இது உதவியாக இருந்து கூந்தல் அடர்த்தியாக வளரச் செய்கிறது.
சிலருக்கு குளிர்காலத்தில் பொடுகு தொல்லை மற்றும் தலையில் அரிப்பு ஏற்படும். இந்த பிரச்சனைகளை கட்டுப்படுத்த செம்பருத்தி எண்ணெய் பயன்படுகிறது. இது உச்சந்தலையின் பி.ஹெச் (pH) அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. மேலும், அதிகப்படியான எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தி, பொடுகு மற்றும் அரிப்பை நீக்குகிறது.
செம்பருத்தியில் பிசுபிசுப்பு தன்மை கொண்ட வழவழப்பான சாறு உள்ளது. இது இயற்கையான கண்டிஷனராக செயல்படுகிறது. வறண்ட கூந்தலை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்ற இது உதவும்.
இந்த குளிர்காலத்தில் இரசாயன பொருட்களை தவிர்த்து, இயற்கையான செம்பருத்தி எண்ணெயை பயன்படுத்தி உங்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகரித்து பாதுகாப்பாக பராமரிக்கலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com
