
குளிர்காலத்தில் இதமான காலநிலையோடு சேர்த்து சில சவால்களும் தேடி வரும். அதில் முக்கியமானது சரும வறட்சி. குளிர்ந்த காற்று சருமத்தில் உள்ள இயற்கையான ஈரப்பதத்தை உறிந்து, முகத்தை பொலிவிழக்க செய்து, வறட்சியாக மாற்றுகிறது. இந்த நேரத்தில் விலை உயர்ந்த க்ரீம்கள் மற்றும் லோஷன்களை பயன்படுத்துவதை விட, உடலை உள்ளிருந்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது கூடுதல் பலன் அளிக்கும்.
நாம் உண்ணும் உணவும், பருகும் பானங்களும் சரும ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தக் குளிர்காலத்தில் உங்கள் சருமத்தை வறட்சியிலிருந்து பாதுகாத்து, இயற்கையாகவே பிரகாசிக்க செய்ய உதவும் 5 அற்புதமான ஜூஸ் வகைகளை பற்றி இதில் விரிவாக காண்போம்.
இந்த மூன்று பொருட்களின் கலவை உங்கள் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை அளிக்கும். பீட்ரூட் மற்றும் ஆப்பிளை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மிக்ஸியில் மாதுளை, நறுக்கிய பீட்ரூட், ஆப்பிள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக அரைக்கவும். பிறகு வடிகட்டி இதனை பருகவும்.
மாதுளையில் உள்ள பாலிபினால்கள் (Polyphenols) மற்றும் புனிகாலஜின்ஸ் (Punicalagins) போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கின்றன. இது இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இருதயத்தை பாதுகாக்கிறது. பீட்ரூட் மற்றும் ஆப்பிள் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, சருமத்தை உள்ளிருந்து ஆரோக்கியமாகவும், சிவந்த நிறத்துடனும் மாற்றுகிறது. எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி சருமத்திற்கு கூடுதல் பொலிவை தருகிறது.
மேலும் படிக்க: Foods for Skin Glow: குளிர்காலத்தில் சருமத்தை பொலிவாக வைத்திருக்க உதவும் 5 உணவுகள் இதோ
உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, சருமத்தை சுத்தப்படுத்த இந்தக் காய்கறி சாறு உதவும். சிறிய கேரட், வெள்ளரிக்காய், இஞ்சி, எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி குடிக்கலாம். இந்த ஜூஸ், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க உதவும். மேலும், இவை நச்சுகளை நீக்கி சருமத்தின் ஆரோக்கியத்தை இயற்கையாக மேம்படுத்தும்.

வயதான தோற்றத்தை தாமதப்படுத்தவும், சரும சுருக்கங்களை கட்டுப்படுத்தவும் இந்த ஜூஸ் ஒரு சிறந்த தேர்வாகும். அன்னாசி பழத்துண்டுகள், மஞ்சள், ஆரஞ்சு, இஞ்சி மற்றும் மிளகுத் தூள் அனைத்தையும் எடுத்து சாறு பிழிந்து கொள்ள வேண்டும். இந்த சாறை தினமும் காலையில் குடிக்கலாம். மஞ்சள் அதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளுக்கு பெயர் பெற்றது. இதனுடன் வைட்டமின் சி நிறைந்த அன்னாசி மற்றும் ஆரஞ்சு சேரும் போது, இது ஒரு ஆற்றல் மிகுந்த ஆன்டி-ஏஜிங் (Anti-aging) பானமாக மாறுகிறது.
மேலும் படிக்க: Turmeric for Skin Glow: குளிர்காலத்தில் சரும பொலிவை பராமரிக்க உதவும் 5 ஹோம்மேட் மஞ்சள் ஃபேஸ் பேக்
சருமத்திற்கு தேவையான நீர்ச்சத்தை அள்ளித் தரும் ஒரு அற்புதமான பானம் இது. வெள்ளரிக்காய், பசலை கீரை, எலுமிச்சை சாறு மற்றும் புதினா இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை ஒன்றாக சேர்த்து அரைக்கவும். இதை வடிகட்டி குடிக்கலாம். இது உடலில் இருந்து நச்சுகளை நீக்க உதவுகிறது. வெள்ளரிக்காய் உடலுக்கு நீர்ச்சத்தை தருகிறது. கீரை, வைட்டமின்களை அளிக்கிறது.

சரும பிரச்சனைகளுக்கு காலங்காலமாக பயன்படுத்தப்படும் ஒரு மருத்துவ பொருள் கற்றாழை. கற்றாழை, எலுமிச்சை சாறு, தேன் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். கற்றாழையின் மேல் உள்ள பச்சை தோலை நீக்கிவிட்டு, உள்ளே இருக்கும் ஜெல்லை மட்டும் எடுக்கவும். அதன் கசப்பு தன்மை போகும் வரை தண்ணீரில் நன்கு கழுவவும். பின்னர் மற்ற பொருட்களுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து பருகவும்.
கற்றாழையில் வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், இது சருமத்தை பளபளப்பாக்க உதவுகிறது. இது சருமத்தை குணப்படுத்தும் தன்மை கொண்டது. மேலும், இதில் உள்ள வைட்டமின் பி12 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது.
குளிர்காலத்தில், வெளிப்புற பராமரிப்போடு, இந்த ஆரோக்கியமான பானங்களையும் உங்கள் தினசரி உணவில் சேர்த்து கொள்ளலாம். இது உங்கள் சருமத்தை வறட்சியின்றி பாதுகாத்து, இயற்கையான பொலிவுடன் வைத்திருக்க உதவும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com