herzindagi
image

Turmeric for Skin Glow: குளிர்காலத்தில் சரும பொலிவை பராமரிக்க உதவும் 5 ஹோம்மேட் மஞ்சள் ஃபேஸ் பேக்

Winter Skin Care: குளிர்காலத்தில் சரும பொலிவை பராமரிக்க உதவும் 5 விதமான ஹோம்மேட் மஞ்சள் ஃபேஸ்பேக் எப்படி தயாரிக்கலாம் என்று இதில் பார்க்கலாம். இவை உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும்.
Editorial
Updated:- 2025-12-12, 19:47 IST

Skin Care Tips: குளிர்காலத்தில் இதமான குளிர் காற்று வீசும். ஆனால், இந்த காற்று நம் சருமத்திற்கு அவ்வளவு நல்லதல்ல. காற்றில் ஈரப்பதம் குறைவதால் சருமம் வறண்டு போவது, பொலிவிழப்பது மற்றும் வெடிப்பு ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் உருவாகும். இந்தக் காலத்தில் சருமத்தை பராமரிக்க நாம் பயன்படுத்தும் இரசாயனம் கலந்த க்ரீம்கள் தற்காலிக தீர்வை மட்டுமே தரும்.

குளிர்காலத்தில் சரும பொலிவை பராமரிக்க உதவும் மஞ்சள் ஹோம்மேட் ஃபேஸ் பேக்:

 

இயற்கையான முறையில், நீண்ட நேரத்திற்கு சருமத்தை ஜொலிக்க வைக்க நம் சமையலறையில் இருக்கும் மஞ்சள் போதுமானதாக இருக்கும். இது கிருமி நாசினியாக மட்டுமல்லாமல், சருமத்திற்கு பொலிவை தரும் ஒரு சிறந்த அழகு சாதன பொருளாகவும் விளங்குகிறது. இந்தக் குளிர்காலத்தில் உங்கள் சருமம் வறண்டு போகாமல், பளபளப்பாக இருக்க உதவும் 5 விதமான மஞ்சள் ஃபேஸ் பேக்குகளை பற்றி இதில் விரிவாக பார்ப்போம்.

 

மஞ்சள் மற்றும் பால் ஃபேஸ் பேக் :

 

வறண்ட சருமத்தை உடனடியாக பிரகாசமாக்க இந்த ஃபேஸ் பேக் உதவும். பாலில் இயற்கையாகவே லாக்டிக் அமிலம் உள்ளது. இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை சீராக நீக்க உதவுகிறது. மஞ்சள், சருமத்தில் ஏற்படும் எரிச்சலை தணிக்கும். பால், சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கும். இந்த இரண்டு பொருட்களும் சேரும் போது சருமம் மென்மையாகவும், பிரகாசமாகவும் மாறும்.

 

செய்முறை:

 

  • ஒரு சிறிய கிண்ணத்தில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ளவும்.
  • அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பால் சேர்க்கவும்.
  • இதை நன்றாக கலந்து பசை போன்று மாற்றிக் கொள்ளவும்.
  • இதனை முகம் முழுவதும் சீராக தடவி 10 முதல் 15 நிமிடங்கள் ஊறவிடவும்.
  • பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.

மேலும் படிக்க: Winter Skin Care: குளிர்காலத்தில் உங்கள் முகத்தை வறண்டு போகாமல் பாதுகாக்க உதவும் டாப் 5 ஹோம்மேட் ஃபேஸ்பேக்

 

மஞ்சள் மற்றும் தேன் ஃபேஸ் பேக்:

 

முகப்பரு பிரச்சனை உள்ளவர்களுக்கும், வறண்ட சருமம் உள்ளவர்களுக்கும் இது மிகச்சிறந்த தேர்வு. தேன் ஒரு இயற்கையான ஈரப்பதம் அளிக்கும் பொருளாகும். அதாவது இது ஈரப்பதத்தை சருமத்திற்குள் தக்கவைக்க உதவுகிறது. தேனில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது மஞ்சளுடன் சேரும் போது, முகப்பருவை ஏற்படுத்தும் கிருமிகளை தடுக்கிறது. மேலும், காயங்கள் மற்றும் தழும்புகளை ஆற்றும் தன்மை இந்த கலவைக்கு உண்டு.

Skin Care Tips

 

செய்முறை:

 

  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், 1 டேபிள் ஸ்பூன் சுத்தமான தேன் சேர்க்கவும்.
  • இதை நன்றாக கலந்து முகத்தில் தடவவும்.
  • 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இது முகத்திற்கு பொலிவை தரும்.

 

மஞ்சள் மற்றும் சந்தனம் ஃபேஸ் பேக்:

 

சருமத்தில் ஏற்படும் சிவப்பு தன்மை மற்றும் எரிச்சலை போக்க இந்த வாசனை மிகுந்த ஃபேஸ் பேக் உதவும். சந்தனம் குளிர்ச்சி தன்மை கொண்டது. இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது முகப்பருவால் பாதிக்கப்பட்ட சருமத்தை குணப்படுத்தும். மஞ்சளுடன் சந்தனம் சேரும் போது, அது சரும துளைகளை சுத்தம் செய்கிறது.

 

செய்முறை:

 

  • தலா 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சந்தன பொடியை எடுத்துக் கொள்ளவும்.
  • இதனுடன் பன்னீர் அல்லது பால் சேர்த்து பசை பதத்திற்கு கலக்கவும்.
  • இதை முகத்தில் தடவி, அது முழுமையாக காயும் வரை விடவும்.
  • இதையடுத்து, நன்கு காய்ந்த பிறகு குளிர்ந்த நீரால் கழுவவும்.

மேலும் படிக்க: Oily Skin Face Pack: குளிர்காலத்தில் அதிக எண்ணெய் பசை கொண்ட சருமத்திற்கு இந்த 5 ஹோம்மேட் ஃபேஸ் பேக்கை பயன்படுத்தவும்

 

மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாறு:

 

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் மங்கலான நிறத்தை மாற்ற நினைப்பவர்களுக்கு இது சிறந்த தீர்வாகும். எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதுவும் மஞ்சளும் சேரும் போது, சருமத்தில் உள்ள கருமை நிறமி மற்றும் கரும்புள்ளிகள் மறைய தொடங்குகின்றன.

Natural Skin Glow

 

செய்முறை:

 

  • அரை டீஸ்பூன் மஞ்சளுடன், சில துளிகள் எலுமிச்சை சாறை கலக்கவும்.
  • இதை முகம் மற்றும் கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் தடவவும்.
  • 10 நிமிடங்கள் கழித்து நன்கு கழுவவும்.
  • உணர்திறன் வாய்ந்த சருமம் கொண்டவர்களாக இருந்தால் எலுமிச்சை பயன்படுத்துவதை தவிர்த்து விடலாம்.

 

மஞ்சள் மற்றும் தயிர்:

 

சென்சிடிவ் ஸ்கின் (Sensitive Skin) எனப்படும் உணர்திறன் வாய்ந்த சருமம் கொண்டவர்கள் இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தலாம். தயிரில் புரோபயாட்டிக் மற்றும் லாக்டிக் அமிலம் நிறைந்துள்ளது. இது சருமத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து முகத்தை பிரகாசமாக்கும்.

 

செய்முறை:

 

  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், 2 டேபிள் ஸ்பூன் கெட்டித் தயிரை கலக்கவும்.
  • இதை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊறவிடவும்.
  • பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

 

மஞ்சள் இயற்கையான பொருள் என்றாலும், சிலருக்கு அது ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். எனவே, முகத்தில் தடவுவதற்கு முன் கையில் சிறிதளவு தடவி பேட்ச் டெஸ்ட் (Patch test) செய்து பார்ப்பது நல்லது. இந்தக் குளிர்காலத்தில், இரசாயனங்கள் கலந்த தயாரிப்புகளை தவிர்த்து, இந்த இயற்கை முறைகளை பின்பற்றி பொலிவான சருமத்தை பெறலாம்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com