Banana Hair Masks : முடி வளர்ச்சி, பளபளப்பிற்கு வாழைப்பழ ஹேர் மாஸ்க் பயன்படுத்துங்க

வாழைப்பழ ஹேர் மாஸ்க் இயற்கையான மற்றும் பயனுள்ள முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக அறியப்படுகின்றன.

banana hair mask for hair growth

வாழைப்பழம் குடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலைக்கு சிறந்தது. இவை தலைமுடியின் பளபளப்பை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது. பொடுகைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும், உச்சந்தலையை ஈரப்பதமாக்குவதற்கும் வாழைப்பழங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வாழைப்பழத்தில் பொட்டாசியம், இயற்கை எண்ணெய்கள், கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இவை நம் தலைமுடியை மென்மையாக்க உதவுகின்றன. சாப்பிடுவதற்கு பயன்படுத்தும் வாழைப்பழங்களையே ஹேர் மாஸ்க் ஆக பயன்படுத்தலாம் என்கிற போது கடைக்குச் சென்று ஏன் வாழைப்பழ ஹேர் மாஸ்க் வாங்க வேண்டும்.

Banana Hair Mask Benefits

வாழைப்பழம், கற்றாழை ஹேர் மாஸ்க்

கற்றாழையில் வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் ஈ நிறைந்துள்ளன. இது உங்கள் உச்சந்தலையில் குவிந்துள்ள இறந்த செல்களை அகற்றவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. கற்றாழையில் புரோட்டியோலிடிக் என்சைம்கள் உள்ளன. அவை உச்சந்தலையில் உள்ள இறந்த சரும செல்களை சரிசெய்து தலைமுடியை சீரமைத்து பளபளப்பை வழங்குகின்றன. இந்த ஹேர் மாஸ்க் முடி உதிர்வதைத் தடுக்கிறது மற்றும் உங்கள் தலைமுடியை வலுவாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது.

தேவையான பொருட்கள்

  • 2-3 மீடியம் சைஸ் வாழைப்பழங்கள்
  • கற்றாழை

ஹேர் மாஸ்க் செய்முறை

  • கற்றாழையிலிருந்து கூழ்களையும் பிரித்தெடுக்கவும்.
  • அடுத்ததாகக் கற்றாழை கூழ் மற்றும் வாழைப்பழங்களை ஒரு கிரைண்டருக்கு மாற்றவும்.
  • கெட்டியான பேஸ்ட் வரும் வரை கலவையை நன்றாக மிக்ஸ் செய்யவும்

பயன்பாடு

  • இந்த கலவை உங்கள் தலைமுடியின் வேர்களில் ஆழமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • முழு உச்சந்தலையிலும் தடவவும்
  • 2 மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள்
  • பிறகு தலைமுடியை குளிர்ந்த நீரில் ஷாம்பூவுடன் பயன்படுத்தி நன்கு கழுவவும்.

வாழைப்பழம், தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க்

தேங்காய் எண்ணெய் நம் உச்சந்தலைக்கு ஊட்டமளித்துதொற்றுகளை குறைக்கிறது. வைட்டமின் ஈ அதிக உள்ளடக்கத்துடன், உலர்ந்த மற்றும் சேதமடைந்த முடிக்கு இது சிறந்தது. மேலும், தேங்காய் எண்ணெயில் உள்ள வைட்டமின் கே பொடுகை குறைக்க உதவுகிறது. வாழைப்பழம் மற்றும் தேங்காய் கலவையானது தலைமுடிக்கு நீண்ட கால பிரகாசத்தை வழங்குகிறது.

தேவையான பொருட்கள்

  • 2 பழுத்த வாழைப்பழங்கள்
  • 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்
  • 1 தேக்கரண்டி தேங்காய் பால்

செய்முறை

  • ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் இரண்டு வாழைப்பழங்களையும் பிசைந்து கொள்ளவும்.
  • அதனுடன் தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் பால் சேர்த்து, கிரீமி பேஸ்ட் கிடைக்கும் வரை கலக்கவும்.

பயன்பாடு

  • தலைமுடியின் வேர்களில் இந்த ஹேர் மாஸ்க்கை தடவவும்
  • தலையில் ஒரு கவர் அணிந்து 30 நிமிடங்களுக்கு அப்படியே இருக்கட்டும்
  • அதன் பிறகு தலைமுடியை ஷாம்பூ போட்டு தண்ணீரில் கழுவவும்

வாழைப்பழம், பப்பாளி ஹேர் மாஸ்க்

பப்பாளி முடி தண்டுக்கு ஊட்டமளிக்கிறது. பப்பாளியில் உள்ள சத்துக்கள் தலைமுடியை பலப்படுத்தி, முடி உதிர்வதை தடுக்கிறது.

தேவையான பொருட்கள்

  • 2 வாழைப்பழங்கள்
  • பழுத்த பப்பாளி
  • 2 தேக்கரண்டி தேன்

செய்முறை

  • வாழைப்பழம் மற்றும் பப்பாளியை சிறு துண்டுகளாக நறுக்கி பிசைந்து கொள்ளவும்.
  • இப்போது பிசைந்த கலவையில் தேன் சேர்த்து நன்றாகப் பேஸ்ட் கிடைக்கும் வரை கலக்கவும்

பயன்பாடு

  • ஹேர் மாஸ்க்கை உங்கள் தலைமுடியின் வேர் முதல் நுனி வரை தடவவும்.
  • கவர் பயன்படுத்தி அரை மணி நேரத்திற்கு அப்படியே விடவும்.
  • அதன் பிறகு ஷாம்பூ பயன்படுத்தி குளிர்ந்த நீரில் தலைமுடியை கழுவவும்.

வாழை மற்றும் பால் ஹேர் மாஸ்க்

பாலில் உள்ள வைட்டமின்கள் மற்றும் புரதங்கள் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கவும், ஈரப்பதமாக்கவும் உதவுகின்றன.

தேவையான பொருட்கள்

  • 1 வாழைப்பழம்
  • 100 மில்லி பால்

செய்முறை

  • வாழைப்பழத்தை ஒரு பாத்திரத்தில் சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
  • வாழைப்பழத் துண்டுகளை ஒரு பிளெண்டருக்கு மாற்றவும்.
  • அதனுடன் பால் சேர்த்து கெட்டியான கிரீமி பேஸ்ட் வரும் வரை கலக்கவும்.

பயன்பாடு

  • இந்த ஹேர் மாஸ்க்கை வேர்களில் இருந்து முடியின் நுனி வரை தடவுங்கள்
  • 30 நிமிடங்களுக்கு அப்படியே விடவும்.
  • வழக்கம்போல் உங்கள் தலைமுடியை ஷாம்பூ போட்டு கழுவவும்.
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP