நீங்கள் நினைத்து பார்த்திடாத வகையில் கற்றாழை சாறினால் சருமத்திலும் உடலிலும் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் இங்கே பகிரப்பட்டுள்ளன.
காயங்களை குணப்படுத்துதல்
தீக்காயம், வெட்டுகள் மற்றும் பிற காயங்களுக்கு கற்றாழை மிகவும் நன்மை பயக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். கற்றாழை சாறு காயங்களை குணப்படுத்தும் நேரத்தை குறைக்கின்றது. குறிப்பாகத் தீக்காயங்களை அளவிடும் போது டிகிரி 1 மற்றும் டிகிரி 2 தீக்காயங்களை கற்றாழை சாறு குணப்படுத்துகிறது. தோலில் ஏற்படும் தீக்காயங்களுக்கு கற்றாழை சிறந்த மருந்தாகும்.
தோல் செல் பெருக்கத்தை எட்டு மடங்கு வேகப்படுத்தவும் செய்கிறது. கற்றாழையினால் மேற்தோல் எனும் Epidermis மீது தண்ணீரை விட வேமகாக ஊடுருவிச் செல்ல முடியும்.
தோல் வயதாவதை எதிர்த்துப் போராட்டம்
கற்றாழை சாறில் வைட்டமின் சி மற்றும் ஈ, பீட்டா கரோட்டின் ஆகியவை ஏராளமாக உள்ளன. இவை தோல் வயதாவதை எதிர்த்து போராடும் பண்புகளைக் கொண்டுள்ளது. ஆண்டிமைக்ரோபியல் பண்பும் அழற்சி எதிர்ப்பு சக்தியும் கற்றாழையில் இருக்கிறது. இது சருமத்தில் உள்ள கறைகளை போக்கவும், தோல் வயதாவை குறைக்கவும் உதவுகிறது. அதேநேரம் உடலில் கொலாஜன் உற்பத்தியும் அதிகமாகிறது.
மேலும் படிங்கGuava Leaves for Hair : முடி உதிர்வு பிரச்சினையை தீர்த்திடும் கொய்யா இலைகள்
தொற்று மற்றும் முகப்பரு குறைப்பு
முகப்பருவால் அவதிப்படுபவர்களுக்கு கற்றாழை உரிய தீர்வு அளித்திடும். இதன் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் சருமத்திற்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் பருக்களை குணப்படுத்துகிறது. நமது சருமத்திற்கு பாக்டீரியாக்களிடம் இருந்து பாதுகாப்பு வழங்குகிறது. கற்றாழையில் உள்ள பாலிசாக்கரைடுகள் மற்றும் கிபெரெலின்கள் புதிய செல்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. கற்றாழை முகத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும் அஸ்ட்ரிஜென்டாகவும் செயல்படுகிறது.
பளபளப்பான சருமம்
பளபளப்பான சருமத்திற்கு கற்றாழை பயன்பாட்டை எளிதான வீட்டு வைத்தியம் என்று குறிப்பிடலாம். கற்றாழை சாறில் சிறிதளவு எலுமிச்சை சாறையும் சேர்த்து பயன்படுத்தவும். ஏற்கனவே அறிந்தபடி சருமத்தில் செல் அதிகரிப்பு, தோல் அழற்சி எதிர்ப்பு, தோல் புண் சிகிச்சை, முகப்பரு தவிர்ப்பு உள்ளிட்டவற்றுக்கு கற்றாழை சாறு இயற்கையான மருந்தாகும். இவை அனைத்திற்கும் கற்றாழை சாறு உதவுவதால் சருமம் பளபளப்படைகிறது.
முடி வளர்ச்சிக்கு உதவி
தோல் செல் அதிகரிப்பு போலவே முடி வளர்ச்சிக்கும் கற்றாழை சாறு உதவுகிறது. ஏனென்றால் கற்றாழை சாறு பயன்பாட்டின் மூலம் உச்சந்தலையில் இரத்தம் ஓட்டம் அதிகரிக்கிறது. அத்தியாவசியமான தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை கற்றாழை வழங்குகிறது. கற்றாழையில் புரோட்டியோலிடிக் என்ஜைம்கள் இருக்கின்றன. இவை உச்சந்தலையில் உள்ள இறந்த சருமத்தை சரிசெய்ய உதவும்.
மேலும் படிங்கMultani Mitti Uses : முகத்தில் முல்தானி மெட்டியை பயன்படுத்தும் வழிகள்!
எனவே மகளிர் மற்றும் ஆடவரின் உச்சந்தலையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு கற்றாழை சிறந்த மருந்தாக செயல்படுகிறது. முடி மற்றும் உச்சந்தலையில் கற்றாழையை பயன்படுத்தும் போது முடியின் உயிர்சக்தியும், பளபளப்பும் பராமரிக்கப்படுகிறது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation