சருமத்திற்கு தேனின் நன்மைகள் அனைவருக்கும் தெரிந்தவை. மாம்பழம் மற்றும் தேனின் கலவையானது கோடையில் உங்கள் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். இதற்காக, நீங்கள் பழுத்த மாம்பழத்தின் கூழ் எடுத்து அதனுடன் 1 டீஸ்பூன் தேன் சேர்க்க வேண்டும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தைக் கழுவவும். இதைச் செய்வதன் மூலம் சருமம் முற்றிலும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
மாம்பழக் கூழ் மற்றும் முல்தானி மெட்டியைப் பயன்படுத்தி, சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்கும் ஒரு ஸ்கின் பேக்கைத் தயாரிக்கலாம். கோடையில் முகத்தில் முல்தானி மெட்டி பயன்படுத்துவதன் மூலம் முகப்பரு போன்ற பிரச்சினைகள் ஏற்படாது. பழுத்த மாம்பழக் கூழை சிறிது முல்தானி மிட்டியுடன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் முகம் கழுவினால் பிரகாசமாக ஜொலிக்கும்.
மேலும் படிக்க: இந்த சிவப்பு நிற சாற்றை தினமும் குடித்து வந்தால் சருமம் செக்கச்செவேல் என மாறும்
கோடை காலத்தில் ரோஸ் வாட்டர் பயன்படுத்துவது சருமத்திற்கு சிறந்தது. உணர்திறன் வாய்ந்த சருமத்திற்கு ரோஸ் வாட்டர் மிகவும் நல்லது. ரோஸ் வாட்டர் ஆக்ஸிஜனேற்றிகளின் மிகச் சிறந்த மூலமாகும். எளிதில் சொன்னால், சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்படும் சேதத்தை ரோஸ் வாட்டர் சரிசெய்கிறது. பழுத்த மாம்பழக் கூழ் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து ஒரு பேக் தயாரிக்கவும். அதை உங்கள் முகத்தில் தடவி அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். அதன் பிறகு, லேசான கைகளால் முகத்தை மெதுவாக தேய்த்து, குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும்.
இந்த பேக் முகத்திற்கு உடனடி பளபளப்பைக் கொண்டுவருகிறது. இது அனைத்து வகையான சருமத்திற்கும் சிறந்தது. பழுத்த மாம்பழத்தின் கூழ், சிறிது ஓட்ஸ் மற்றும் முல்தானி மிட்டி ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இவை அனைத்தையும் தண்ணீர் மற்றும் பால் உதவியுடன் நன்றாக அரைத்து, பின்னர் இந்த கலவையை முகத்தில் தடவவும். இதன்பிறகு 20 நிமிடங்களுக்குப் கழித்து முகத்தை தண்ணீரில் கழுவ வேண்டும்.
அழகான மற்றும் பளபளப்பான முகத்தைப் பெற மிகவும் நன்மை பயக்கும் முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் மாம்பழ கூழ் பேஸ் ஃபேக். இவை இரண்டுடன், சில துளிகள் தேனை சேர்த்து கலக்கவும். முகம் மற்றும் கழுத்தில் இதைப் பயன்படுத்தி 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். உங்கள் முகத்தில் இருந்து முட்டை வாசனையைத் தவிர்க்க நல்ல ஃபேஸ் வாஷைப் பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க: பெண்கள் வேக்சிங் செய்த பிறகு சருமம் கருமையாகாமல் தடுக்க உதவும் அழகுக்குறிப்புகள்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com