முடி உதிர்தல், முன்கூட்டிய நரைத்தல் மற்றும் பொடுகு ஆகியவை பொதுவான முடி பிரச்சினைகளாகும். வயது வித்தியாசமின்றி பெரும்பாலான மக்கள் மாசுபாடு மற்றும் வாழ்க்கை முறை காரணமாக முடி சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். முடி பிரச்சனைகளை சமாளிக்க ரோஸ்மேரி எண்ணெய்யை தலையில் பயன்படுத்தி பாருங்கள்.
'குல் மெஹந்தி கா டெல்' என்று பிரபலமாக அழைக்கப்படும் ரோஸ்மேரி எண்ணெய் ஆயுர்வேத மருத்துவத்தில் அதன் மருத்துவ குணங்களுக்காக பெயர் பெற்றது. இந்த எண்ணெய் முடி மற்றும் சருமத்திற்கு அளித்திடும் நன்மைகளை பற்றி பெரியவர்கள் உங்களிடம் கூறி இருக்க வாய்ப்புண்டு. சமீப காலமாக இது தோல் பராமரிப்பு பொருட்கள் மத்தியில் பிரபலமாகி அத்தியாவசிய எண்ணெய் ஆகவும் மாறிவிட்டது. ரோஸ்மேரி எண்ணெய் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பு மற்றும் வறட்சியைத் தடுக்கிறது.
மேலும் இந்த எண்ணெய் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. குறிப்பாக முடி வளர்ச்சிக்கான மயிர்க்கால்கள் உதிர்வதை தடுக்கிறது. முடி சார்ந்த பிரச்சினைகளுக்கு அதிகபட்ச நன்மைகளைப் பெற்றிட ரோஸ்மேரி எண்ணெய்யை எப்படி பயன்படுத்துவது என இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
உச்சந்தலையில் மசாஜ் செய்யவும்
உச்சந்தலையில் எண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்வது உடல் சூட்டை வெளியேற்றி குளிர்ச்சியை தரும். உங்கள் உச்சந்தலையில் நான்கு அல்லது ஐந்து சொட்டு ரோஸ்மேரி எண்ணெய்யை ஊற்றி கைகளால் மெதுவாக மசாஜ் செய்யவும். இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்பதால் தலையை சுற்றிலும் மசாஜ் செய்யவும்.
அதேநேரம் உச்சந்தலையில் ஐந்து சொட்டுக்கு மேல் ரோஸ்மேரி எண்ணெயைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஏனெனில் அதன் அதிகப்படியான பயன்பாடு அரிப்புக்கு வழிவகுக்கும்.
மேலும் படிங்கSkin Glowing Tips : பளபளப்பான சருமத்திற்கான எளிய அழகு குறிப்புகள்
ஷாம்பூவுடன் ரோஸ்மேரி எண்ணெய்
தலைமுடிக்கு எண்ணெய் தடவுவதை விரும்பவில்லை என்றால் அதை உங்கள் ஷாம்பு அல்லது கண்டிஷனருடன் சேர்த்து பயன்படுத்துங்கள் ஷாம்பூவில் சில துளிகள் ரோஸ்மேரி எண்ணெயைச் சேர்த்து உச்சந்தலையில் தடவவும். உச்சந்தலையை மெதுவாக மசாஜ் செய்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
ஹேர் மாஸ்க் உடன் பயன்பாடு
நீங்கள் ஹேர் மாஸ்க் பயன்படுத்தும் நபராக இருந்தால் அதை உச்சந்தலையில் தடவுவதற்கு முன் சில துளிகள் ரோஸ்மேரி எண்ணெயைச் சேர்க்கலாம்.
அலோ வேரா - ரோஸ்மேரி கலவை
அலோ வேராவின் மருத்துவ குணங்களை பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும். அதன் ஊட்டமளிக்கும் பண்புகளால் தோல் பராமரிப்பு பொருட்களில் பிரபலமான மூலப்பொருளாக மாறியுள்ளது. எனவே அலோ வேரா ஜெல்லுடன் சில துளிகள் ரோஸ்மேரி எண்ணெயுடன் கலந்து அதை உச்சந்தலையில் தடவலாம். 30 நிமிடங்கள் கழித்து ஷாம்பூ பயன்படுத்தி தலைமுடியைக் கழுவவும்.
மேலும் படிங்கசருமம், முடி உதிர்வு பிரச்சினைக்கு தீர்வளிக்கும் கற்றாழை
ரோஸ்மேரி & தேங்காய் எண்ணெய்
உச்சந்தலையில் ரோஸ்மேரி எண்ணெயை மட்டும் பயன்படுத்த விரும்பவில்லை என்றால் தேங்காய் எண்ணெயுடன் கலந்து அதன் நன்மைகளைப் பெறலாம். இந்த இரண்டு பொருட்களின் கலவையானது உங்கள் முடியை வலுப்படுத்தும் மற்றும் முடி உதிர்வை குறைக்கும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation