
ஒவ்வொரு காலநிலைக்கு ஏற்றார் போன்று நம்முடைய சரும பராமரிப்பு முறையை நாம் வடிவமைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான், நம் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். உதாரணத்திற்கு, குளிர் காலத்தில் நம் சருமம் பார்ப்பதற்கு வறண்டு போய் நீர்ச்சத்து இல்லாமல் இருப்பதை போன்று இருக்கும்.
மேலும் படிக்க: இயற்கையான அழகுக்கு உதவும் 5 மூலிகைகள்; உங்கள் சரும பராமரிப்பில் இவற்றை பயன்படுத்தவும்
அதனடிப்படையில், இந்த குளிர்காலத்தில் உங்கள் சருமத்தை எவ்வாறு சீரான முறையில் பராமரிக்கலாம் என்று இந்தக் கட்டுரையில் காணலாம். இவை பின்பற்றுவதற்கு சுலபமாக இருப்பதால் எல்லோராலும் எளிதாக செய்ய முடியும்.
குளிர்காலத்தில் உங்கள் சருமம் அதிக வறட்சிக்கு உள்ளாகாமல் இருக்க, மிருதுவான, கிரீம் அல்லது எண்ணெய் அடிப்படையிலான க்ளென்சரை தேர்ந்தெடுங்கள். இந்த கிளின்சர்கள், சருமத்தின் இயற்கையான எண்ணெய்களை அகற்றாமல், அழுக்கை மட்டும் நீக்கி சுத்தம் செய்யும். அதிக நுரை தரும் அல்லது சோப் அடிப்படையிலான கடுமையான க்ளென்சரை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இவை சருமத்தை மேலும் வறட்சியடைய செய்யலாம்.

கோடை காலத்தில் பயன்படுத்திய இலகுவான லோஷனை மாற்றி, குளிர் காலத்திற்கு ஏற்ற கெட்டியான, க்ரீம்-அடிப்படையிலான மாய்ஸ்சரைசரை பயன்படுத்துங்கள். செராமைட்ஸ் (Ceramides) அல்லது ஷியா பட்டர் (Shea Butter) போன்ற உட்பொருட்களை கொண்ட மாய்ஸ்சரைசர்கள் ஆழ்ந்த நீரேற்றத்தை அளிக்கும். ஈரப்பதத்தை திறம்பட பாதுகாக்கும் ஒரு கெட்டியான ஆயின்மென்ட் போன்ற மாய்ஸ்சரைசரை பயன்படுத்துவது சருமத்திற்கு மிகச் சிறந்தது.
மேலும் படிக்க: கூந்தல் உதிர்வு பிரச்சனை அதிகமாக இருக்கிறதா? இந்த 7 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
சருமத்தின் ஈரப்பதத்தை அதிகரிக்க சீரம் போன்றவற்றை சேர்ப்பது அவசியம். ஹைலூரோனிக் ஆசிட் (Hyaluronic Acid) கொண்ட சீரத்தை இதற்காக பயன்படுத்தலாம். இது ஈரப்பதத்தை சருமத்தினுள் எடுத்துக் கொள்ள உதவும். இவை உங்கள் சருமத்திற்கு ஒரு கூடுதல் அடுக்கு பாதுகாப்பு போன்று செயல்படும்.

குளிர்காலமாக இருந்தாலும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதை தவிர்க்கக் கூடாது. காலை நேரத்தில் குறைந்தபட்சம் எஸ்.பி.எஃப் 30 கொண்ட பிராட்-ஸ்பெக்ட்ரம் சன்ஸ்கிரீனை (Broad-spectrum sunscreen) தவறாமல் பயன்படுத்தலாம். ஏனெனில், குளிர்காலத்திலும் புற ஊதாக்கதிர்கள் (UV rays) வலுவாகவே இருக்கும். எனவே, ஆண்டு முழுவதும் உங்கள் சருமத்தை பாதுகாப்பது மிகவும் முக்கியம்.
இந்த எளிய குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் உங்கள் சருமம் குளிர்காலம் முழுவதும் மென்மையாகவும், பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். ஆனால், இது போன்ற பொருட்களை பயன்படுத்துவதற்கு முன்பாக ஒரு மருத்துவரை அணுகி உங்கள் சருமத்தின் தன்மையை அறிந்து கொள்வது நல்லது. இதன் மூலம் தேவையற்ற சிக்கல்களை தவிர்க்கலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com