நாம் அனைவருமே புதிதாக வீடு கட்டும் போது வாஸ்து சாஸ்திரப்படி வீடு கட்டி முடிக்க வேண்டும் என நினைப்போம். வாஸ்து சாஸ்திரப்படி வீடு கட்டினால் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழலாம் என நம்புகிறோம். இரண்டு அடுக்கு வீடு அல்லது மொட்டை மாடிக்கு செல்ல வாஸ்துபடி படிக்கட்டு அமைப்பது அவசியமாகிறது. இதற்கு வீடு கட்டும் வரைபட திட்டத்தில் எங்கு படிக்கப்பட்டு அமைப்பதென வாஸ்துபடி முடிவெடுக்க வேண்டும். நாம் வாஸ்துபடி வீடு கட்ட நினைக்கும் போது வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, வட மேற்கு, வட கிழக்கு, தென் மேற்கு, தென் கிழக்கு ஆகிய திசைகளை துல்லியமாக தெரிந்திருக்க வேண்டும். வீட்டின் உள்ளே வாயு, ஈசான்ய, குபேர, அக்னி என நான்கு மூலைகளிலும் படிக்கட்டு அமைக்க கூடாது.
அக்னி மூலையில் சமையலறையும், குபேர மூலையில் படுக்கையறையும் இருக்கும். படுக்கை அறையில் பீரோ உட்பட முக்கியமானவற்றை வைத்திருப்போம். வாயு மூலையில் கழிவறை கட்டப்பட்டு இருக்கும். ஈசான்ய மூலையில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு இருக்கும். அங்கு கனமாக ஏதும் இருக்க கூடாது என்பதால் கண்டிப்பாகப் படிக்கட்டு வைக்க கூடாது. மேலும் குறிப்பாக வீட்டின் மத்திய ஸ்தானத்திலும் படிக்கட்டு அமைக்க கூடாது.
படிக்கட்டு அமைக்க கூடாத இடங்கள்
வீட்டிற்கு வெளியே ஈசான்ய மூலையில் வடக்கு - கிழக்கு பக்கமும், அக்னி மூலையின் தென் திசையிலும், மேற்கு திசையிலும் படிக்கட்டு அமைப்பதை தவிர்ப்பது நல்லது. வாடகைக்கு விட வீடு கட்டுவோர் பெரும்பாலும் இதை பின்பற்றுவதில்லை. சதுர அடிக்கு ஏற்ப படிக்கட்டு அமைக்கின்றனர்.
வீட்டிற்குள் படிக்கட்டு வைக்க உகந்த இடங்கள்
தென் மேற்கு திசையில் படிக்கட்டு அமைக்கலாம். மேற்கு திசையில் வாயு மூலை - குபேர மூலையின் நடுவே படிக்கட்டு வைக்கலாம். வீட்டிற்குள் தென் திசையில் அக்னி மூலை - குபேர மூலையின் நடுவே படிக்கட்டு வைக்கலாம்.
வீட்டிற்கு வெளியே படிக்கட்டு வைப்பதாக இருந்தால் வாயு மூலையின் வெளிப்புறத்தில் வைக்கலாம். அதே போல தென் கிழக்கு திசையில் அக்னி மூலைக்கு வெளியே மாடிப்படி அமைக்கலாம். ஒரு சில வீடுகளில் தென் மேற்கு திசையில் குபேர மூலைக்கு வெளியே மாடி படிக்கட்டு அமைப்பார்கள்.
படிக்கட்டு அமைக்கும் திசை
மேற்கு மற்றும் தெற்கு திசை பார்த்து ஏறும் படிக்கட்டு அமைப்பது அவசியம். வலம் சுற்றும் திசையில் படிக்கட்டு இருக்க வேண்டும். ஒற்றைப்படை எண்களில் படிக்கட்டு வைத்தால் லாபம் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
இதுபோன்ற வாஸ்து, ஆன்மிக கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation