Vijay Tv Serial Actress : விஜய் டிவி சீரியல் பிரபலங்களின் சம்பள விவரம்! யார் அதிக சம்பளம் வாங்குபவர் தெரியுமா?

விஜய் டிவி சீரியல் பிரபலங்களின் சம்பள விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம். இந்த தகவல் இணையத்தில் வெளியானவை மட்டுமே. உறுதிப்படுத்தப்பட்டவை இல்லை. 

vijay tv serial actress
vijay tv serial actress

சுஜிதா தனுஷ்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி வெள்ளித்திரை நடிகை, சின்னத்திரை நடிகை என உயர்ந்தவர் சுஜிதா தனுஷ். விஜய் டிவியில் இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் என்ற ரோலில் நடித்து வருகிறார். முலலையாக நடித்த விஜே சித்ராவுக்கு பிறகும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை மக்கள் தொடர்ந்து பார்க்க இவர் தான் காரணம். இவரின் ஒருநாள் சம்பளம் ரூ. 15,000 என சொல்லப்படுகிறது.

சுசித்ரா

இல்லத்தரசிகளின் ஃபேவரெட் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியாவாக வாழ்ந்து ரசிகர்கள் மனதில் கொள்ளை அடித்தவர் சுசித்ரா. கன்னட நடிகையான இவருக்கு ஒருநாள் சம்பளம் ரூ. 12,000 என சொல்லப்படுகிறது. பாக்கியலட்சுமி சீரியல் காஸ்டில் இவருக்கு தான் அதிகம் சம்பளம் எனவும் சொல்லப்படுகிறது.

வினுஷா தேவி

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா ரோலுக்கு ரோஷினிக்கு பதில் வந்தவர் வினுஷா தேவி. இவர் தற்போது பாரதி கண்ணம்மா 2வில் நடித்து வருகிறார். வெள்ளித்திரையில் எண்ட்ரி கொடுத்தார். இவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.8,000 என சொல்லப்படுகிறது.

baakiya

நக்‌ஷத்ரா நாகேஷ்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் வெற்றிக்கரமான சீரியலில் தமிழும் சரஸ்வதியும் ஒன்று. இதில் லீட் ரோலில் நடிபப்வர் நக்‌ஷ்த்ரா நாகேஷ். ஆங்கர், வெள்ளித்திரை துணை நடிகை, சின்னத்திரை நடிகை என பலமுகங்களை கொண்டவர். இவருக்கு ஒருநாள் சம்பளம் ரூ. 10,000 என சொல்லப்படுகிறது.

baakiyalaskhmi radhika

ரேஷ்மா

பாக்கியலட்சுமி சீரியலில் வில்லியாக நடிப்பவர் நடிகை ரேஷ்மா பசுபலேட்டி. ராதிகாவாக நடிக்கும் இவரின் கதாபாத்திரம் சீரியலுக்கு முஇகப் பெரிய தூண். ரேஷ்மாவின் ஒருநாள் சம்பளம் ரூ. 7000 என தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: instagram
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP